தேன் - உணவும் அதுவே; மருந்தும் அதுவே!

மே, 20 உலக தேன் தினம்
தேன்
Honeyhttps://www.24mantra.com

தேன் என்பது மிகவும் அரிதான உணவுகளில் ஒன்றாகும். அது ஒருபோதும் கெட்டுப்போகாது. தேனை காற்றுப் புகாத பாட்டில்களில் சேமித்து வைத்தால் நீண்ட காலம் தேனை வைத்திருக்க முடியும். தேனில் உள்ள ஒரு நொதி ஹைட்ரஜன் பெராக்சைடை உருவாக்குகிறது. இது உடலுக்கு இயற்கையான பாதுகாப்பை தருகிறது.

‘எப்போதும் பதப்படுத்தப்பட்ட மற்றும் அல்ட்ரா வயலட் கதிர்களால் சுத்தப்படுத்தப்பட்ட தேனை சாப்பிடுவதுதான் நல்லது. நேரடியாக வரும் மலைத் தேன் நல்லதல்ல’ என்கிறார்கள். தேனில் உயிருள்ள கிருமிகள் மற்றும் இறந்த கிருமிகளும் இருக்கும். இந்த கிருமிகளிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருளுக்கு ‘பார்சின்’ என்று பெயர். இது குடல் வியாதிகளை உண்டாக்கும், சில நேரங்களில் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும். ஒரு வயது வரைக்கும் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக் கூடாது. அதன் பிறகு மிகக்குறைந்த அளவில் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஐந்து வயதிற்கு பிறகு ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் தினமும் 10 முதல் 15 மி.லி தேன் சாப்பிட்டு வரலாம்.

ஆங்கில மருந்துகளை சாப்பிடும்போது மறந்தும் தேன் சாப்பிடக் கூடாது. அது மருந்தை முறித்து வேண்டாத விபரீதங்களை ஏற்படுத்தும். தெரியாமல் சாப்பிட்டு விட்டால் உடனே எலுமிச்சை சாறு கொடுக்க விஷ முறிவு ஏற்பட்டு விடும்.

தேனில் மங்கனீசு, சிலிக்கான், போரான், குரோமியம், செம்பு, லித்தியம், துத்தநாகம், ஒஸ்மியம் மற்றும் குறைவாக நிக்கல், ஈயம், டைட்டானியம், டின் போன்ற தாதுக்கள் உள்ளதாக மாஸ்கோ பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரக்டோஸ், குளுக்கோஸ், நீர், ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள், வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் சக்தியாக தேன் இருப்பதால், தேன் இருமல் மற்றும் தொண்டை புண்களுக்கு சிகிச்சை அளிக்க பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. தினமும் தேன் சாப்பிட உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சருமம் பொலிவோடு இருக்கும், குரல் வளம் காக்கப்படும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவதால் அது இதய பாதுகாப்பை தருவதோடு, உடற்கழிவுகள் வெளியேற்றப்பட்டு உடல் எடையை குறைக்கலாம் என்கிறார்கள் நேஷனல் செண்டர் ஃபார் பையோ டெக்னாலஜி ஆய்வாளர்கள். கொழுப்பு கட்டிகளை கரைக்கும் ஆற்றல் உடையது தேன். ‘லிபோமா’ எனும் கொழுப்புத் திசுக்கட்டிகளுக்கு தேனை நேரடியாக சருமத்தின் மீது பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

மஞ்சள் காமாலைக்கு வாழைப்பழம், பப்பாளி இலை, இஞ்சி டீ போன்றவை நல்லது. அதோடு தேனையும் பயன்படுத்தி வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்.

அதிகப்படியான யூரிக் அமிலம் உடலில் சேர்வதால் ஏற்படும் ‘கவுட்’ தொந்தரவுகளுக்கு தேன் சிறந்த மருந்து. பல பாக்டீரியாக்களை கொல்லும் ஆற்றல் தேனில் உள்ளது என்பதை பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தேனை மஞ்சள் தூள் கலந்து சாப்பிடுவது நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு நல்லது என்கிறது ஆயுர்வேதம். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் தேனை சுடுநீரில் ஊற்றி ஆவி பிடித்தால் சரியாகும் என்கிறது ஆயுர்வேதம். இரத்த சர்க்கரைக் குறை நோயான, ‘ஹைபோகிளை சேமியா‘ பாதிக்கப்பட்டு மயங்கியவர்களுக்கு வாயில் தேனை தடவி சுவைக்க வைக்க அவர்களின் மயக்கம் தெளியும்.

இன்சோம்னியா எனும் தூக்ககு குறைபாடுகளுக்கு தேனை எலுமிச்சை சாறுடன் கலந்து நெற்றியில் பற்றுப் போட நல்ல நிவாரணம் கிடைக்கும். பாலுடன் தேனை கலந்து சாப்பிட சரியாகும்.

இரத்த தமணியில் சேரும் கொழுப்பைகு கரைக்கும் ஆற்றல் தேனுக்கு உண்டு. ஒரு ஸ்பூன் தேனை எலுமிச்சை சாறுடன் கலந்து சாப்பிட ‘அந்தோரோகுளோரிசஸ்’ நோய் சரியாகும். தேன் ‘டையோரியாவை’ விரட்டும் என்பதை நிரூபித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
தேன்

தேனை மருந்தாக உடலுக்குள் சாப்பிடுவது, மேற்பூச்சாக என இரண்டு வகைகளில் பயன்படுத்தலாம். இதில் ஹைட்ரஜன் பெராக்சைடு இருப்பதால், இது காயத்தை குணப்படுத்துகிறது. மஞ்சள், வேப்பிலை அதனுடன் சிறிதளவு நெய் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் போல ஆக்கி அதனை புண்கள் மீது தடவ புண்கள் விரைவில் ஆறும். தேன் மூலம் தீக்காயங்கள், படுக்கை புண்களை குணப்படுத்த முடியும் என்று நைஜீரியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தேனின் மருத்துவ பலன்களை பெற நீங்கள் பயன்படுத்தும் தேன் சுத்தமானதாக இருத்தல் வேண்டும். சுத்தமான தேனை கண்டறிய எளிய வழி அதனை ஒரு துளி தண்ணீருக்குள் விட வேண்டும். அந்த துளியானது சிறிது நேரத்திற்கு அப்படியே இருந்து பின்னர் கரைத்தால் அது சுத்தமான தேன். அப்படி இல்லாமல் உடனே கரைத்தால் அது கலப்படத் தேன் என்று தெரிந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com