மயக்கும் மஞ்சள் நிற ஆவாரம் பூவின் மருத்துவ மகிமைகள்!

Medicinal glories of the mesmerizing yellow Aavaram flower
Medicinal glories of the mesmerizing yellow Aavaram flowerhttps://ta.quora.com
Published on

ந்தியாவில் ஆவாரம் பூ மருத்துவத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆவாரம் பூ அதிகமாக ஆற்றங்கரை ஓரமாகவே வளரக்கூடிய குற்றுச் செடியாகும். இது மஞ்சள் நிற பூக்களை பூக்கிறது. இதன் காய்ந்த பூவும், மொக்கும் மருத்துவ சிகிச்சைக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவாரம் பூவை பொதுவாக சரும நோய்களை குணப்படுத்தவும், உடல் துர்நாற்றத்தை போக்கவும் பயன்படுத்துவார்கள். மேலும், வலியை போக்க, ஜுரம், சிறுநீரகப் பிரச்னை, அல்சர், கல்லீரல் பிரச்னை, முடக்குவாதம், விழி வெண்படல அழற்சி போன்றவற்றைப் போக்குவதற்கு ஆவாரம் பூ பயன்படுத்தப்படுகிறது. ஆவாரம் பூவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. இதில் டெர்பனாய்ட்ஸ், டேனின், சேபோனின்ஸ், பிளாவநாய்ட்ஸ் ஆகியன உள்ளன.

ஆவாரம் பூ சர்க்கரை வியாதியை போக்கக்கூடிய அருமருந்தாகும். ஆவாரம் பூவை டீயாக போட்டு குடிப்பதால் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறையும். நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்று மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோயைப் போக்கும். இதில் சேப்போனின் என்னும் நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி உள்ளதால் அது பல வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

பெண்களுக்கு உண்டாகும் சிறுநீர் குழாயில் ஏற்படும் தொற்றை ஆவாரம் பூ போக்குகிறது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்து நோய் தொற்றை போக்குகிறது. உடலின் நச்சுத்தன்மை மற்றும் வேண்டாத கழிவுகளை வெளியேற்றுகிறது.

ஆவாரம் பூ டீயை அருந்துவதால் குடல் இயக்கம் சீராக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது. மேலும், அதிகப்படியான மாதவிலக்கு இரத்தப் போக்கை ஒழுங்குப்படுத்துகிறது. மேலும், இது அதிப்படியான உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

காயவைத்த ஆவாரம் பூவை முடி வளர்ச்சிக்காக தயாரிக்கப்படும் எண்ணையில் சேர்ப்பதுண்டு. தலையில் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றை போக்க இது உதவுகிறது. அது மட்டுமின்றி, காய வைத்த ஆவாரம் பூ சருமத்திற்கு மிகவும் நன்மை செய்கிறது. ஆவாரம் பூவை பேஸ் பேக்காக போட்டுக்கொள்வதால் சரும கரும்புள்ளி, பிக்மென்டேஷன், உடல் துர்நாற்றம் போன்றவற்றைப் போக்குகிறது. மேலும், ஆவாரம் பூ உடலில் உள்ள நீர் வீக்கத்தைப் போக்கும் தன்மை கொண்டது. அல்சரை குணப்படுத்தவும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தம்பதியரில் ஐந்து வகை உண்டு; அதில் நீங்கள் எந்த ரகம் தெரியுமா?
Medicinal glories of the mesmerizing yellow Aavaram flower

ஆவாரம் பூ பொடியோடு பசு நெய் சேர்த்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். மேனி பொன்னிறமாக, ஆவாரம் பூ பொடியை பாலில் கலந்து பருக வேண்டும். ஆவாரம் பூவை சோப்பாக செய்து நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்கிறார்கள். ஆவாரம் பூ டீயில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளதால், தற்போது நிறைய பேர் அதை விரும்பிக் குடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆவாரம் பூ டீயை இரவில் தூங்கப்போகும் முன்பு பருகுவது நல்லதாகும். இது தூக்கமின்மையை போக்கி நன்றாக தூக்கம் வர உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com