நாம் கார் மற்றும் நம் வீடு மூலமாக 68000 மைக்ரோப்ளாஸ்டிக்கை உள்ளிழுக்கிறோம். சுருக்கமாக சொல்வதென்றால் காரிலிருந்து, ஒரு க்யூபிக்மீட்டர் காற்றில் 2000 மைக்ரோப்ளாஸ்டிக்ஸ் வெளியாகிறது.
இவை நச்சுப் பொருள்களை கொண்டுள்ளதால் உடலுக்குத் கேடு விளைவிக்கின்றன. சமீபத்திய ஆராய்ச்சியின்படி மனிதர்களாகிய நாம் பத்தாயிரம் மைக்ரோப்ளாஸ்டிக்குகளை உள்ளிழுக்கிறோம். கண்ணுக்குத் தெரியாது இவை நம் நுரையீரலை பாதிக்கின்றன. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் வீட்டிலேயே இருக்கும் மைக்ரோப்ளாஸ்டிக்குகளை ஆராய்ந்தனர். 16 இடங்களிலிருந்து சாம்பிள்கள் எடுக்கப்பட்டன. அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் வீடுகளில் ஒரு கியூபிக் மீட்டருக்கு 528 மைக்ரோபாளாஸ்டிக்குகள் இருப்பது அறியப்பட்டது.
மற்றும் கார்களின் உள்ளே இருந்த காற்றில் 2238 மைக்ரோப்ளாஸ்டிக்குகள் ஒரு க்யூபிக் மீட்டரில் இருப்பது தெரிய வந்துள்ளது. நம்மை அறியாமலேயை நாம் ப்ளாஸ்டிக்கை சுவாசிகிக்கிறோம். இதில் 94 சதவீத மைக்ரோ ப்ளாஸ்டிக்ஸ் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு இருந்து, அவை நம் நுரையீரலை மட்டுமல்லாது இரத்தத்திலேயும் கலக்கிறது என்பதுதான் அபாயத்தின் உச்சம். மேலும் நாம் ஒரு நாளைக்கு 68000 மைக்ரோப்ளாஸ்ட்டிகை உட்கொள்கிறோம் என்று தெரிய வருகிறது. இந்த நுண்ணிய பிளாஸ்டிக் மனித இனப்பெருக்க ஹார்மோன் சுழற்சியையும், கருமுட்டை வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதனால் ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைகிறது.
இந்த மைக்ரோப்ளாஸ்டிக்குகளில் நஞ்சு கலந்திருப்பதால் செயற்கை நிறங்கள் மற்றும் preservative மூலம் உள்ளே செல்கிறது. நம் உடலில் இது அழற்சி ஏற்படுத்தி நுரையீரலை பாதிக்கும். நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். இதனால் இதயநோய்கள், புற்றுநோய் மற்றும் ஹார்மோன் சமச்சீரின்மை போன்றவைகள் ஏற்படலாம்.
நாம் எல்லோரும் வெளியில் உள்ள காற்று மாசு பற்றிக் கவலைப்படுகிறோம். ஆனால் வீட்டின் உள்ளேயே இவ்வளவு மோசமான சூழல் உள்ளது என்பதை உணரவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள், கார்பெட்டுகள், துணிகள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் கெமிக்கல்கள் மற்றும் காரின் உள்ளே இருக்கிற மைக்ரோப்ளாஸ்டிக் என பலவகைகளில் தீமை தரும் சூழலில் உள்ளோம்.
இதை தடுப்பது எப்படி?
வீட்டை தூசுகளின்றி சுத்தமாக பராமரிப்பது, அதிகமாக ப்ளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, ப்ளாஸ்டிக்கிற்கு பதிலாக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உபயோகிப்பது, காருக்குள்ள காற்றை சுத்தப்படுத்த freshners பயன்படுத்துவது மற்றும் காரை நல்ல காற்றுபடுமாறு வைப்பது போன்றவற்றைக் கடைப்பிடிக்கலாம். ப்ளாஸ்டிக்கை தவிர்ப்பதே மிகச்சிறந்தது. பிளாஸ்டிக் கொள்கலன் மற்றும் ப்ளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்கலாம். உயர்வின் துகள் வடிகட்டி (ஏர் purifier) பயன்படுத்தலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)