பால் Vs தயிர்: குடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது தெரியுமா? 

milk and curd
பால் Vs தயிர்

செரிமானம், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் நமது குடல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், குடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டியது அவசியம். குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பால் மற்றும் தயிர் இரண்டுமே மிகவும் பிரபலமானவை. இவற்றை அவ்வப்போது சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என சொல்லப்படுகிறது. ஆனால் இவ்விரண்டில் எதை சாப்பிடுவது அதிக ஆரோக்கியம் தரும் என இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பாலில் கால்சியம், புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என அனைத்துமே உள்ளன. இருப்பினும் இதில் இருக்கும் லாக்டோஸ், சிலருக்கு வயிற்று உபாதைகளை ஏற்படுத்தலாம். மறுபுறம் தயிர் எனப்படுவது பாலை புளிக்க வைப்பதன் மூலமாக தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையில் லாக்டோஸ், லாக்டிக் அமிலமாக மாறுகிறது. எனவே லாக்டோஸ் செரிக்காத நபர்களுக்கும் தயிர் ஜீரணக்கூடியதாக மாறுகிறது. மேலும் தயிரில் உள்ள குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இதனால் நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகின்றது. 

பாலைவிட தயிரில் ப்ரோபயோடிக் உள்ளடக்கம் அதிகம் உள்ளது. அதாவது நேரடி பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் கலவையை ப்ரோபயோடிக் என்பார்கள். இதை நேரடியாக உட்கொள்ளும்போது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது. இந்த பாக்டீரியாக்கள் குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை மீட்டெடுக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும், வீக்கத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன. 

மேலும், பாலை விட தயிரில் அதிக அளவு புரதம் உள்ளது. இது குடல் செயல்பாட்டை பராமரிக்க மிகவும் அவசியம். பாலில் உள்ள புரதத்துடன் ஒப்பிடுகையில் தயிரில் உள்ள புரதம் ஜீரணிக்க எளிதானது. இது குடல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்களுக்கு நல்லது. 

பால் மற்றும் தயிர் என இரண்டுமே அதன் தனித்தனியான நன்மைகளை வழங்குகின்றன. எனவே ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் பதில்கள் மாறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிலருக்கு பால் எந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தாது, சிலருக்கு தயிர் பொருத்தமான தேர்வாக இருக்கலாம். எனவே உங்கள் உடலுக்கு எது ஒத்துவரும் என்பதன் அடிப்படையில் பால் அல்லது தயிர் எதை உட்கொள்வது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 

இதையும் படியுங்கள்:
நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 
milk and curd

பால் Vs தயிர்: குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க விரும்புபவர்களுக்கு பாலை விட தயிரே சிறந்த தேர்வாக இருக்கும். தயிரில் உள்ள நொதித்தல் செயல்முறை செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது லாக்டோஸ் உள்ளடக்கத்தை குறைத்து நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது. பாலில் உள்ள லாக்டோஸ் உங்களுக்கு எந்த பாதிப்புகளையும் தரவில்லை என்றால், பால்குடிப்பதும் நல்லதுதான். இருப்பினும் பாலைவிட தயிரை உங்கள் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான அமைப்பை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கலாம்.    

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com