.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
பெரும்பாலும் கேள்விப்படாத பெயர் அதலைக்காய் (Athalaikkai). எனவே, சமையலிலும் இதனை நிறைய பேர் பயன்படுத்துவதில்லை. ஆனாலும், இதிலுள்ள மருத்துவ குணங்கள், எண்ணற்ற நோய்களை நீக்க துணை புரிகிறது. வயலோரங்களில் முளைத்துவிடும். இலைகள் இதய வடிவிலும், மலர்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.. ஒரே கொடியில் ஆண் மலர்கள் தனியாகவும், பெண் மலர்கள் தனியாகவும் இருக்கும். அதலைக்காய் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
அதலைக்காயை பொறுத்தவரையில், உலகத்தில் எந்த நாட்டிலும் விளையாத ஒரு காய். தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடியது. பாகற்காயின் குடும்பத்தை சேர்ந்தது இந்த அதலைக்காய். பாகற்காயை போலவே கசப்புக்காயாகும். எனவே, பாகற்காயை போலவே குழம்பு, பொரியல் செய்யலாம்.
பாகற்காய் எந்த அளவுக்கு சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறதோ, அதுபோலவே அதலைக்காயும், நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த அதலைக்காயில் துத்தநாகம், வைட்டமின் C, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன... இவைகளை தவிர, நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து போன்றவை அபரிமிதமாக நிறைந்துள்ளது.
மஞ்சள் காமாலையால் அவதிப்படுபவர்கள், இந்த அதலைக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் தீர்வு கிடைக்கும். மஞ்சள் காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வயிற்றிலுள்ள குடற்புழு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்னையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அழிப்பதோடு, குடற்புழு பிரச்னைகளையும் சரி செய்கிறது. வயிற்றிலுள்ள குடற்புழுக்கள், கிருமிகளையும் வெளியேற்றிவிடும்.
இந்த காயை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கும்... மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதிப்படுபவர்களுக்கு அதலைக்காய் கை கொடுத்து உதவுகிறது. சளி தொந்தரவு, அஜீரண சிக்கலும் தீர்கிறது. உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் அதலைக்காயை தினந்தோறும் தங்களது உணவில் சேர்த்து வந்தால், உடல் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதிகளிலும், கரிசல் காட்டு பகுதிகளிலும் அதிகமாக விளையக்கூடியது. அதிலும் மழைக்காலங்களில் மட்டுமே இந்த அதலைக்காய் கிடைக்கும். அதாவது, கார்த்திகை மற்றும் மார்கழி மாதப்பருவத்தில் மட்டும் விளையும் காயாகும்.
இது ஒரு சீசன் காய் என்பதால், வற்றல் போட்டு வைத்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த அதலைக்காயை உடனே சமைத்து விடவேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருந்தால் தானாகவே முளைக்க ஆரம்பித்துவிடும் அல்லது வெடிப்பு ஏற்படும்.