மாதவிடாய் நேரத்தில் Mood Swing ஆகுதா? அப்போ இந்தப் பழங்களை சாப்பிடுங்கள்!

Mood Swing
Mood Swing
Published on

பெண்களுக்கு வழக்கமாகவே Mood Swing ஆகும். அதுவும் மாதவிடாய் நேரங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த சமயத்தில் நீங்கள் எந்தெந்த பழங்களை எடுத்துக்கொண்டால் Mood Swing ஐ தவிர்க்கலாம் என்று பார்ப்போம்.

பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் நாள்கள் என்பது உடலளவில் மட்டுமல்லாது பலருக்கு மனதளவிலும் தடுமாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய நாட்களாகும். மாதவிடாய் நேரங்களில் Mood Swings ஏற்படும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் Mood Swings என்பது மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வார காலத்திற்கு முன்பிருந்தே தொடங்குகிறது.

நன்றாகப் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் கோபம், எரிச்சல், சோகம், கவலை எனப் பல்வேறு உணர்வுகளால் ஆட்டுவிக்கப்படுவார்கள். 28 நாட்கள் நடக்கும் மாதவிடாய் சுழற்சி நாட்களில், ஹார்மோன்கள் பல ஏற்ற இறக்கங்களை சந்திக்கும்.

இதில் இரண்டு வகையான மனநிலை மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்று  Premenstrual dysphoric disorder (PMDD) ஆகும். இது மிகவும் கடுமையானதாக இருக்கும், பல்வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கியிருக்கும். மற்றொன்று Prementural Syndrome. 

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இந்த Mood Swing க்கு காரணம் சரியாக எதுவும் தெரியவில்லை. ஆனால் மருத்துவர்கள் இது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அதேபோல் மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது இந்த சமயங்களில் உடலிலிருந்து பொட்டாசியம் சத்துகள் வெளியேறுகின்றன. அதனால், அவை நரம்பு மடலங்களை பாதிக்கிறது. இதன் காரணமாகவே Mood Swing ஏற்படுகிறது.

அப்போது பொட்டாசியம் சத்துக்கள் உள்ள பழங்களை எடுத்துக்கொண்டால், இந்த Mood Swing ஐ தவிர்க்கலாம்.

குறிப்பாக இந்த மூன்று உணவு பொருட்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள்.

1.  வாழைப்பழம்.

2.  ஆரஞ்ச்

3.  சர்க்கரை வள்ளிக்கிழங்கு.

இதையும் படியுங்கள்:
கண்ணோடு காண்பதெல்லாம்...?
Mood Swing

இந்த மூன்றிலும் அதிகப்படியான பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதால், இதனை சாப்பிடுவதன் மூலம் Mood Swing ஐ தவிர்க்கலாம்.

அதேபோல் உணவில் சிட்ரஸ் அதிகம் உள்ள பழங்கள், கிரீன் டீ, லெமன் டீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது மூடு ஸ்விங்ஸை கையாள முடியும்.

இனியாவது மாதவிடாய் நேரங்களில் தேவையில்லாமல் கோபப்படுவதையும், எரிந்து விழுவதையும் தவிர்க்க பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com