

முருங்கை பூ தேன் (Moringa flower Honey Benefits) என்பது, முருங்கை தோட்டங்களில் கூடு வைத்து தேனீ வளா்க்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேன் ஆகும். ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்தது இந்த முருங்கை தேன். இது, முருங்கை மரத்தின் மருத்துவ குணங்களையும் தேனின் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கே கொண்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை உணவுப் பொருளாகும்,
முருங்கைப்பூ தேனில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புகள் (கால்சியம், இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம்), வைட்டமின்கள் (A, C, E) மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (antioxidants) உடலின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துகின்றன, நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராடுகின்றன.
கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது கண்களுக்கு பெரும் தீங்கிழைக்கிறது. இதில் இருந்து நிவாரணம் பெற, முருங்கை தேனை பாலில் கலந்து நன்கு காய்ச்சி சாப்பிடலாம்.
முருங்கை தேன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இருதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற பிரச்னைகளைத் தீர்க்கிறது.
வறட்சியான சருமம் கொண்டவர்கள், இத்தேனை முகத்தில் தடவி, ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்து, முகப்பொலிவு பெறலாம்.
முருங்கை பூ தேனில் உள்ள அதிகப்படியான கால்சியம் சத்து
எலும்புகளை வலுப்படுத்தவும், மூட்டு வலி மற்றும் கீல்வாதத்தைப் போக்கவும் உதவுகிறது.
இது இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது.
முருங்கை பூ தேன் ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது, மாதவிடாய் காலங்களில் மனநிலை மாற்றத்தின் போது பெண்களுக்கு உதவுகிறது.