நம் வீட்டு வாசலில் கிடைக்கும் ஏழைகளின் கொலாஜன்!

முருங்கைக் கீரை காம்பை குப்பையில் போடாதீங்க! இதில்தான் இருக்கு இளமையின் ரகசியம்!
moringa keerai stalk
moringa keerai stalk Img credit: AI Image
Published on

அழகு மற்றும் ஆரோக்கிய உலகில் மிகவும் பிரபலமான சொல் 'கொலாஜன்'. பொதுவாக, கொலாஜன் என்பது நமது சருமம், முடி, நகம், எலும்பு, மூட்டு ஆகியவற்றை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவும் ஒரு முக்கிய புரதம். வயது அதிகரிக்கும் போது உடலில் கொலாஜன் உற்பத்தி குறைந்து, சுருக்கங்கள், மூட்டு வலி, சருமத்தில் தளர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஆனால், இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் ஒரு எளிய வழி உண்டு. அதுதான் முருங்கைத் தண்டு. நம்மில் பலர் முருங்கை கீரையைச் சாப்பிட்டுவிட்டு அதன் காம்புகளையும், தண்டுகளையும் குப்பையில் எறிந்துவிடுவோம். ஆனால், இனி அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள். நம் வீட்டு வாசலில் வளரும் முருங்கைத் தண்டிலும் கொலாஜன் அபரிமிதமான அளவில் உள்ளது.

முருங்கைத் தண்டு கொலாஜன் நன்மைகள்:

  • முருங்கையில் ஆரஞ்சை விட 7 மடங்கு அதிக வைட்டமின் C உள்ளது. கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் C தான் மிக முக்கியமான 'கேட்டலிஸ்ட்' ஆகும். எனவே, செயற்கை மருந்துகளை விட இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

  • வைட்டமின் C அதிகமாக இருப்பதால், இது உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சுருக்கங்களை குறைக்கும். சருமத்தில் உள்ள தளர்வைத் தடுக்கும் மற்றும் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தரும்.

  • முருங்கைத் தண்டில் உள்ள கால்சியம் மற்றும் மாக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்தும். மூட்டு வலியை குறைக்கும்.

  • கொலாஜன் அதிகரித்தால் முடி உதிர்வு குறைந்து, முடி வேர்கள் பலப்படும். மேலும், நகங்கள் உடைதல் குறையும்.

  • இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் ஜீரணத்தை மேம்படுத்தி உடல் நச்சுகளை வெளியேற்ற உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
கொய்யா விதைகள்: உங்கள் ஆரோக்கியத்திற்கு நண்பனா? எதிரியா? அறிவியல் சொல்லும் உண்மை என்ன?
moringa keerai stalk

முருங்கை கீரைத் தண்டு எப்படி பயன்படுத்துவது?

முருங்கை தண்டு சூப்:

தண்டுகளைச் சமைக்கும்போது அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக நீரில் இறங்கும். முருங்கைக்கீரையின் இளசான தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி, நீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். இந்தச் சாற்றை வடிகட்டி வாரம் இருமுறை குடித்து வந்தால், உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்பட்டு சருமம் பொலிவு பெறும்.

தண்டுப் பொடி:

தண்டுகளை நிழலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். அரை டீஸ்பூன் தண்டுப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இது எலும்பு இணைப்புகளில் உள்ள கொலாஜனை பராமரிக்க உதவும்.

அழகு கிரீம்கள் மற்றும் விலை உயர்ந்த சப்ளிமெண்ட்களுக்கு மாற்றாக, நம் வீட்டிலேயே கிடைக்கும் முருங்கையை உணவில் சேர்த்தால் இயற்கையான ஆரோக்கியத்தையும் இளமையையும் பெறலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com