உங்களுக்கு இருமல் ஜலதோஷம் போன்ற பிரச்னைகள் இயற்கை முறையில் குணமாக இந்த முல்லைன் டீ மிகச் சிறந்த ஒன்று. இதன் விஞ்ஞானப் பெயர் vrerbascum thepsus. இந்த மூலிகை தேனீர் பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இது அழற்சியைக் குறைத்து பாக்டீரியாக்களை நீக்கி நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. இதன் பூக்கள் இலைகள் மற்றும் பழங்கள் அனைத்துமே மூலிகை குணங்களை கொண்டவை. இது ஸ்நாப்டிராகன் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் மூச்சுவிட சிரமமாக இருக்கும்போது இந்த டீ அருந்த, அழற்சி குறைந்து நன்கு மூச்சு விட முடியும்.
நுரையீரலில் சளியை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வைக்கும். இதன்மூலம் ப்ராங்கைடிஸ் பிரச்னை குறைக்கப்படுகிறது.
இந்த மூலிகை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பெற்றதால் தொற்றுக்களை நீக்கி இயற்கை மருந்தாக செயல்படுகிறது. இது வைரஸையும் எதிர்க்கும் பண்பு உள்ளதால் இன்ஃப்ளூயன்சா வைரஸை எதிர்த்து போராடுகிறது. இதனால் வைரஸ் நீக்கப்படுகின்றன.
இதற்கு அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளதால் வீக்கத்தை தடுத்து தொண்டையில் கரகரப்பை போக்குகிறது. இதனால் பிரச்னை குறைகிறது.
இதன் ஆன்டி ஆக்சிடண்ட் பண்பினால் நோயெதிர்ப்பை அதிகரித்து செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இந்த மூலிகை தேனீரில் ஃப்ளேவினாய்டுகள் உள்ளதால் ஆக்சிடேடிவ் அழுத்தத்தைக் போக்கி செல்களை பாதுகாக்கிறது.
இது இதயத்தை ஆரோக்கியமாகவும் மற்றும் புற்று நோயையும் தடுக்கிறது.
இது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் வயிறு வீக்கத்தை நீக்குகிறது. உணவிற்குப் பிறகு இந்த தேனீர் உட்கொள்வதால் செரிமானம் சீராகிறது.
தலைவலி மற்றும் நரம்புகளின் பிரச்னைகளை போக்குகிறது. நரம்பு மண்டலத்தையும் தசைகளையும் ஆரோக்கியமாக வைக்கிறது. இது நல்ல தூக்கத்தை மேம்படுத்துகிறது.
முல்லைன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் ஆயில் சருமத்திற்கும் சிறந்தது. உடலில் ஏற்படும் புண் மற்றும் அரிப்பை நீக்குகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு சிறந்தது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)