'கார்த்திகை மாசத்து முருங்கைக் கீரையை கணவனுக்கு கொடுக்காமல் தின்பாளாம் மனைவி'... ஏன் தெரியுமா?

கார்த்திகை மாதத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் இரும்பு சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை அதிகமாக இருக்கும்.
முருங்கைக் கீரை
முருங்கைக் கீரை
Published on

முருங்கைக்கீரையை கார்த்திகை மாதத்தில் உணவில் கட்டாயம் சேர்ப்பார்கள். கார்த்திகை மாசத்து முருங்கைக்கீரையை கணவனுக்கு கொடுக்காமல் தின்பாள். கார்த்திகை மாசத்து கீரையில் நெய் ஒழுகும் என்ற முருங்கை குறித்து சொலவடைகள் தென்மாவட்டங்களில் இருக்கின்றன.

ஆண்டு முழுவதும் இலைகள் இருந்தாலும் ஐப்பசி மாதம் பெய்யும் மழையை தொடர்ந்து கார்த்திகை மாதம் மழை பெய்யும் போது முருங்கையில் புது தளிர்கள் வரும். இந்த தளிர்களில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்கள், உலோக உப்புகள் ஆகியவை அதிகமாக இருக்கும். மரம் பூக்கத் தொடங்கியவுடன் காரத்தன்மையுடன் இருந்த சத்துப்பொருட்கள் அமிலத்தன்மைக்கு மாறத் தொடங்கும். அதனால் கீரையில் சுவை குறையும். இது அனைத்து கீரைகளுக்கும் பொருந்தும். எந்த கீரையாக இருந்தாலும் அதனை பூப்பதற்குள் பறித்து சமைத்து உண்ண வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் கிடைக்கும் முருங்கை இலையில் இரும்பு சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை அதிகமாக இருக்கும்.

முருங்கை இலை கிடைக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள் முருங்கை இலை பொடி வாங்கி பயன்படுத்துங்கள்.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்த சோகையை எதிர்த்து போராட உதவும். நமக்குத் தேவையான இருபது அமினோ அமிலங்களில் பதினெட்டு இந்த முருங்கைக்கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத அந்த எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த எட்டு அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கை கீரைதான்.

இதையும் படியுங்கள்:
முருங்கை கீரையின் முக்கியத்துவம்!
முருங்கைக் கீரை

* ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

* முருங்கைக் கீரையில் தயிரில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிக புரதமும் ஆரஞ்சு பழத்தில் உள்ளதை போல ஏழு மடங்கு அதிக வைட்டமின் சியும் கிடைக்கிறது.

* முருங்கை இலைகளை நீரில் கொதிக்க வைத்து சீரகம், உப்பு மற்றும் சில காய்களை சேர்த்து வெண்ணெய் போட்டு சூப் செய்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த சூப் உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.

* முருங்கைக்கீரை சாற்றுடன் பாலை கலந்து கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். சாற்றை வடிகட்டி அதை பாலுடன் கலந்து கைக்குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தையின் பல் எலும்புகள் உறுதியாக வளரும்.

* தினமும் முருங்கை கீரை பொரியல் அளவாக உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மருத்துவரை நாட வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகவே கட்டாயம் உணவில் முருங்கைகீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* முருங்கை கீரையை துவரம் பருப்பு சேர்த்து குழம்பாக வைக்கலாம். வேர்க்கடலை பொடித்தது, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து பொரியலாகவும் செய்யலாம்.

* தொண்டை கம்மலுக்கு கூட முருங்கைக்கீரை பயன்படுகிறது. இதன் சாறைப் பிழிந்து தொண்டையில் தடவிக் கொண்டோமானால் தொண்டை கம்மல் போய்விடும்.

* முருங்கைக்கீரையை பொரித்தோ, குழம்பு வைத்தோ சாப்பிட்டு வந்தால் மார்பு சளி முற்றிலுமாக நீங்கிவிடும்.

* முருங்கைக் கீரையில் வைட்டமின் சி இருப்பதால் அதற்கு சொறி, சிரங்குகளை ஆற்றும் சக்தி உள்ளது.

* இருதய நோய்கள், ஆஸ்துமா போன்றவை ஏற்படாதிருக்க முருங்கைக்கீரை கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது.

* முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி இரும்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இந்த கீரையை அவித்து சாப்பிடுவதால் நல்ல பலனை தரும். முருங்கைக்கீரையில் எல்லாவிதமான அமினோ அமிலங்களும் இருப்பதால் நோய் கிருமிகள் நம்முடைய உடலுக்குள் நுழைய விடாமல் தடுத்து விடுகிறது.

* நீரிழிவு நோயாளிகள் முருங்கை கீரையுடன் எள்ளை சேர்த்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

* உஷ்ணாதிக்கத்தால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று உப்புசம், அடிவயிற்றை இழுத்து பிடித்துக் கொள்ளுதல், வயிற்று உளைச்சல் போன்றவை குணமாக முருங்கைக்கீரையை நெய்யுடன் பொரியல் செய்து சாப்பிட்டாலே கோளாறுகள் நீங்கிவிடும்.

* நெய்யை காய்ச்சும் போது முருங்கை இலையை சேர்த்து காய்ச்சினால் கம கம என மணக்கும்.

*ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால்தான் கார்த்திகை மாதம் மழைக்காலத்தில் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் முருங்கைக் கீரையை கட்டாயம் சேர்த்துக் கொண்டு எதிர்ப்பு சக்தியை கூட்டிக் கொள்கிறார்கள்.

*முருங்கை கீரையின் இலைகளை உதிர்த்து இரவில் ஒரு துணியில் சுற்றி வைத்து விட்டு காலையில் எடுத்தால் சுலபமாக உதிர்ந்து விடும்.

இதையும் படியுங்கள்:
40 வயதை கடந்த பெண்களுக்கு கால்சியம் நிறைந்த முருங்கை கீரை தொக்கு
முருங்கைக் கீரை

*ஒரு சிலருக்கு ஒவ்வாமை காரணமாக வயிற்றோட்டம் வரலாம். அதனால் நம் உடலுக்கு தக்கவாறு சேர்த்து கொள்ள வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

முருங்கை இலை கிடைக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள் முருங்கை இலை பொடி வாங்கி பயன்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com