உங்கள் வீட்டில் கடுகு இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த நோய்கள் வரவே வராது!

Mustard Seeds and natural remedies
Mustard Seeds and natural remediesRead now!
Updated on

கடுகில் உயர்தர தாதுக்களும் தாது உப்புக்களும் அடங்கியுள்ளன‌. வைட்டமின்கள், ஆன்டிஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளன. இதில் உள்ள சல்பர், அப்லோடாக்சின் போன்றவை நச்சுத்தன்மையை நீங்குகின்றன. கோடைக்காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்து பூசப்படுகிறது. கட்டி பெரிதான பிறகு அரைத்துப் பூச கட்டி உடைந்து சீழ் வெளியேறுகிறது.

கடுகு விதைகளில் உடலுக்கு அவசியமான எண்ணெய் சத்து உள்ளது‌. மேலும் சினிகிரின், மைரோசின், ஆதிக் பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்கள் நிறைந்துள்ளன. அதிக கலோரி கொண்டது. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்சத்து உள்ளது.

கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. ஃபோலேட்ஸ், நியாசின், ரிபோஃளேவின், பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் இவை பங்கெடுக்ககூடியதாகும்.

நியாசின் இரத்தக் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். இதன் கால்சியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற உப்புகளும் உண்டு‌. கால்சியம் எலும்பை வலுப்படுத்தும். தாமிரம் இரத்தசிவப்பணுக்களை உற்பத்தி செய்யும்‌. தற்கொலை எண்ணத்தில் விஷம் அருந்தியவர்களுக்கு கடுகை அரைத்து நீர் விட்டுக் கொடுக்க வாந்தி ஏற்பட்டு விஷம் கட்டுப்படும்‌. கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது‌.

அடிபட்டு இரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்று போட ரத்தக் கட்டு மறையும்‌. கைகால்கள் சில்லிட்டுப் போனால் அந்த இடத்தில் கடுகை அரைத்து பற்று போட நிவாரணம் தரும்‌. கடுகை அரைத்து தேனில் குழைத்து கொடுக்க ஆஸ்துமா கபம் குணமடையும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து அரைத்து அருந்த விக்கல் நிற்கும்.

கடுகில் உள்ள பிகாம்ப்ளக்ஸ் மற்றும் பலஃப்ளேவினாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது‌. கடுகு எண்ணெய் கொழுப்பைக் கட்டுப் படுத்துகிறது‌. இதனால் உயர் இரத்த அழுத்தம் தடுக்கப் படுகிறது‌.

கண்ணுக்கு கீழ் சதை தொங்குகிறதா? கடுகை அரைத்து சலித்து தேங்காய் எண்ணையில் குழைத்துக் தடவ பயன் தெரியும். கடுகு எண்ணையை சிறிது சூடாக்கி தோல் மீது மசாஜ் செய்ய அரிப்பு நீங்கும்‌. கர்ப்பகால வயிற்று வரிகளை நீங்க கடுகு எண்ணையுடன் வெண்ணை கலந்து தினமும் வயிற்றில் தடவவும். கடுகு, துவரம் பருப்பை அரைத்துத் தயிரில் சேர்த்து முகத்தில் தடவிக் கழுவ முகம் ஜொலிக்கும்.

இதையும் படியுங்கள்:
சருமம் ஜொலிக்கவும், இளமையாக இருக்கவும் இந்த ஒரு பழம் போதும்! மிஸ் பண்ணிடாதீங்க!
Mustard Seeds and natural remedies

முட்டிப்பகுதியில் கடுகு எண்ணையை தடவ கருமை நீங்கும். உடல் முழுவதும் கடுகு எண்ணை தேய்த்துக் குளிக்க எலும்புகள் வலுவாகவும். கடுகு எண்ணையை சிறிது சூடாக்கி பாத வெடிப்பில் தடவ குணமாகும்‌. தலைமுடிக்கு ஷாம்புவிற்கு பதிலாக கடுகு 100 கிராம், துவரை 100 கிராம், சீயக்காய் ஒரு கிலோ, வெந்தயம் அரைகிலோ எல்லாம் சேர்த்து பொடிசெய்து இதை தலைமுடிக்குப் பயன்படுத்த தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

கடுகு மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணையில் காய்ச்சி சில சொட்டுக்களை காதில் விட தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட கடுகை பற்றி 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்ற பழமொழி கூறப்படுகிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com