சருமம் ஜொலிக்கவும், இளமையாக இருக்கவும் இந்த ஒரு பழம் போதும்! மிஸ் பண்ணிடாதீங்க!

Star Fruit
Star Fruit
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

நட்சத்திர வடிவில் இருக்கும் நட்சத்திரப்பழம் (கார்ம்போலா) என்று அழைக்கப்படுகிறது‌. இது ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் தோலும் சாப்பிடக்கூடியதாகும். நல்ல பழுத்த பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் காயாக இருக்கும் போது பச்சை நிறத்தில் இருக்கும்.

இந்த பழம் அதிக அளவில் மலேஷியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மரத்தை எவர்கிரீன் மரம் என்று அழைக்கிறார்கள்‌.‌ இந்தப் பழத்தை அறிமுகப்படுத்தியவர்கள் போர்ச்சுகீசியர்கள் ஆவர்‌.

இது புளிப்பு மற்றும் இனிப்புச் சுவை கொண்டது. இது சாலட் மற்றும் ஜுஸ்களில் சேர்க்கப்படுகிறது. குறைந்த கலோரி, நிறைந்த நீர்ச்சத்து, நார்ச்சத்து, காப்பர், மக்னீசியம் மற்றும் பி5 சத்து நிறைந்தது. இந்த பழம் உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

  • இதில் சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளதால் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது‌. இதன் சி சத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  • இதில் நார் சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்கலை தடுத்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிறு வீக்கமோ மலச்சிக்கலோ ஏற்பட்டால் நீர்சத்து நிறைந்த இந்த பழத்தை உட்கொள்வது நல்லது. செரிமான சக்தி மேம்படும்.

  • இதில் பொட்டாசியம் உள்ளதால் நரம்புகளுக்கும் தசை இயக்கத்திற்கும் சிறந்தது‌, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

  • குறைந்த கலோரிகளும், அதிக நார்சத்தும் நிறைந்ததால் இதை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதன்மூலம் வேறு உணவுகளை நாடத் தோன்றாது. உடல் எடையும் கட்டுப்படும்.

  • இதன் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் ஆக்சிடேடிவ் அழுத்தத்தை குறைப்பதால் இளமையாக இருக்க வைக்கும்.

  • இதில் அழற்சியை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளதால் உடலில் எந்தவித அழற்சியையும் ஏற்படுத்தாமல் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.

  • இதில் குறைந்த கலோரிகள் மற்றும் நார்சத்து உள்ளதால் நம் ரத்தச் சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் பண்பைப் பெற்றது. நீரிழிவு நோயாளிகள் கூட இந்த பழத்தை உட்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உஷார்: தலையணைக்கு அடியில் மொபைல் போன் வைக்கிறீர்களா?
Star Fruit
  • நம் உடலில் தண்ணீர் அளவைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவு இதில் தண்ணீர்ச் சத்து நிறைந்துள்ளதால் இதை உட்கொண்டால் சோர்வு நீங்கி சக்தி கிடைக்கும். கோடைக் காலங்களில் உடல் நீர்சத்தோடு இருக்க ஏற்ற பழம் இது.

  • மூலநோய் உள்ளவர்கள் நட்சத்திரப்பழம் சாப்பிட்டு வர குணம் தெரியும்.

  • குளிர் காலங்களில் இந்த பழத்தை உட்கொள்வதால் சளி மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் தீரும்.

  • இந்தப் பழம் உண்பதால் சருமம் நல்ல பளபளப்பை அடைகிறது.

  • இந்தப் பழம் உண்பதால் சருமம் நல்ல பளபளப்பை அடைகிறது.

  • நீர்சத்து, நார்சத்து நிறைந்த இப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பெறலாம்.

எச்சரிக்கை

நட்சத்திரம் பழத்தில் ஆக்சலேட்கள் உள்ளன. சிறுநீரகம் பிரச்னை உள்ளவர்களுக்கு இப்பழத்தின் கார்ம்பாக்சின் தீங்கு விளைவிக்கும்‌. ஆகவே சிறுநீரக பாதிப்பு மற்றும் டயாலிசிஸ் சேர்ந்தவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com