நாகதாளி பழத்தின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

நாகதாளி பழம்
நாகதாளி பழம்https://www.youtube.com

நாகதாளி பழத்தை சப்பாத்திக்கள்ளி பழம் என்று சொல்வார்கள். முந்தைய காலத்தில் வேலிக்காக இந்த சப்பாத்திக்கள்ளியை நட்டு வளர்த்திருப்பார்கள். இதற்கு தண்ணீர் தேவையில்லை. வறண்ட நிலங்களில் ஆடு, மாடு மேய்க்கும்போது நா வறட்சிக்கும், வெயிலில் ஏற்படும் உடற்சோர்வை போக்கவும், உஷ்ணத்தை குறைக்கவும் இந்தப் பழம் உதவி புரியும்.

ஓடைகளில் தேங்கியிருக்கும் அசுத்தமான நீரை நன்னீராக மாற்ற சப்பாத்திக்கள்ளியின் மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து கலங்கிய அசுத்தமான நீருடன் கலந்து வைக்க சிறிது நேரத்தில் சுத்தமான நீர் மட்டும் கிடைக்கும். கழிவுகள் வீழ்படிவாக கீழே இருக்கும். இந்தத் தண்ணீரை குடிக்கும்போது உடலானது பெரும் ஆற்றலைப் பெறுகிறது. நாகதாளிப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்களும், உயர்தரமான நார்சத்தும் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஜி மிகவும் அதிகமாக இருக்கும்.

நாகதாளி பழத்தில் இருக்கும் மருத்துவப் பயன்கள்: இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, இதில் இருக்கும் மிகையான பொட்டாசியம் இதயத் துடிப்பை சீரடையச் செய்யும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரி செய்துவிடும். உயர் இரத்த அழுத்தத்தால் வரும் மாரடைப்பைத் தவிர்க்க முடியும். மேலும், கருமுட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்தப் பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

குங்குமப்பூவை விட இந்த நாகதாளிப் பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பையில் இருக்கும் நீர் கட்டிகள் தானாக அழிந்து விடுமாம். இதை சாப்பிடும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிவப்பாக இருக்குமாம். இந்தப் பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களும் விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிட்டு வரும்போது மற்ற எந்தவித இனிப்பான பொருட்களும் சாப்பிடக் கூடாது. டீ, காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பழம் கக்குவான் நோய், புற்றுநோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்தது.

சப்பாத்திக்கள்ளியின் பசையை மேல்பூச்சாகப் பயன்படுத்தி வீக்கத்தைப் போக்கலாம். உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு இந்த மடலின் உள்ளே இருக்கும் சோற்றுடன் குவாட்ஸ் எனப்படும் வெள்ளைக்கல்லை அரைத்து கட்டிகளின் மீது பற்று போட, கட்டிகள் கரைந்து விடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் சருமத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 
நாகதாளி பழம்

இந்தப் பழத்தை சாப்பிட்டு வர குரல்வளை, பித்தப்பை, மலக்குடல் சார்ந்த அனைத்து குறைபாடுகளும் நீங்கும். காச இருமலும், இரத்தம் கக்குதலும் தீரும். இது ஞாபக மறதிக்கு அருமருந்து, கண் பார்வை கூர்மையாகிறது. இதில் இருக்கும் உயர்தர நார்ச்சத்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடல் பருமனை குறைக்கிறது. மேலும். சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.

நாகதாளிப் பழத்தை சாப்பிடும் முறை: இந்தப் பழத்தின் மேற்பகுதியில் நிறைய முட்கள் இருக்கும். இது முள் பூ ஆகும். இந்த முள்ளை ஒரு கல்லில் வைத்துத் தேய்த்து முட்களை ஒரு துணியால் துடைத்து போக்கி விட வேண்டும். இதன் பழுத்த பழத்தின் மேல் பகுதியை கை கொண்டு பிய்த்து எடுக்கும்போது அதனுள் முதலில் ஒரு தொண்டை முள் சற்று பெரிதாக இருக்கும். அதை எடுத்து விட்டு உள்ளிருக்கும் சிவப்பு நிற சதைப் பகுதியை சாப்பிட வேண்டும். இதில் ஒரு தித்திப்பு, புளிப்பு கலந்து மிகவும் சுவையாக இருக்கும்.

இயற்கை கொடுத்த சப்பாத்தி கள்ளிப்பழம் கிடைக்கும்போது முறையாக முள்ளை நீக்கி சாப்பிட்டால் நிறைய நோய்களை குணப்படுத்தும். இந்தப் பழத்தைப் பற்றி அறியாமலே சாப்பிட்டவர்கள் நோய் நொடி இன்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com