உங்கள் சருமத்தில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

Skin Rash
Symptoms of Diabetes on the Skin

நீரிழிவு நோய் என்பது உலக அளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலையாகும். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சோர்வு போன்ற நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகளை மக்கள் பெரும்பாலும் அறிந்திருந்தாலும், நீரிழிவு நோய்க்கான அறிகுறி சருமத்தில் ஏற்படும் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த பதிவில் நீரிழிவு நோய்க்கான சரும அறிகுறிகள் பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

வறட்சி மற்றும் அரிப்பு: நீரிழிவு நோயின் பொதுவான தோல் அறிகுறிகளில் ஒன்று வறட்சி மற்றும் அரிப்பாகும். அதிக ரத்த சர்க்கரை அளவால் உடல் தனது ஈரப்பதத்தை இழந்து வறட்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக கைகள் கால்கள் போன்ற பகுதிகளில் தோல் இருக்கமாகி, அரிப்பை ஏற்படுத்தலாம். 

தோல் தொற்று நோய்கள்: நீரிழிவு நோயாளிகள் தோல் தொற்று நோய்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். பாக்டீரியா மற்றும் புஞ்சை தொற்று,  கொப்புளங்கள் போன்றவை அடிக்கடி ஏற்படலாம். மேலும் அவை குணமடைய அதிக நேரம் எடுக்கும். இது நோய் தொற்றுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவக்க வைத்தல், வீக்கம் மற்றும் மென்மையாக மாற்றுதல் போன்றவற்றை ஏற்படுத்தும். 

மெதுவாக குணமடையும் காயங்கள்: நீரிழிவு நோயானது காயங்களை ஆற்றும் திறனைக் குறைக்கிறது. சிறிய வெட்டுக்கள் அல்லது கீறல்கள் கூட குணமடைய அதிக காலம் எடுக்கலாம். ஒருவேளை உங்களுக்கு காயம் ஏற்பட்டு விரைவில் குணமடையவில்லை என்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக ஒரு சுகாதார நிபுணரை அணுகி ஆலோசிப்பது அவசியம். 

கருமையான தோல் திட்டுக்கள்: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு தோலை கருமையாக மாற்றும் Acanthosis Nigricans எனப்படும் ஒரு நிலை ஏற்படலாம். இந்தத் திட்டுக்கள் பொதுவாக அக்குள் இடுப்பு மற்றும் கழுத்து போன்ற மடிப்புகள் உள்ள இடங்களில் காணப்படும். இது பெரும்பாலும் டைப் 2 நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக இருக்கும். 

தோல் நிறமாற்றம்: நீரிழிவு நோயானது சருமத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்தும். சில பகுதிகளில் குறிப்பாக தாடைகள் முழங்கால்கள் மற்றும் முழங்கைகளில் தோல் இலகுவாகவோ அல்லது கருமையாகவோ மாறலாம். இத்தகை மாற்றம் பெரும்பாலும் பாதிப்பில்லாதது என்றாலும், இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி மதிப்பீடு செய்ய வேண்டும். 

இதையும் படியுங்கள்:
Hives எனப்படும் தோல் அரிப்பின் காரணங்கள் இவைதான்!
Skin Rash

இந்த தோல் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டறிந்தால் அல்லது நீரிழிவு நோய் இருக்குமோ என்ற கவலைகள் உங்களுக்கு இருந்தால், டாக்டரை உடனடியாக அணுகி ரத்தப் பரிசோதனை செய்ய செய்ய வேண்டும். நீரிழிவு நோயின் அறிகுறிகளானது ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமாக இருக்கும் என்பதால், எல்லா நபர்களுக்கும் தோலில் அறிகுறிகள் தென்படும் என நினைக்க வேண்டாம். இருப்பினும் இவற்றை அறிந்திருப்பது உங்களது ஆரோக்கியத்தை நிர்வகிப்பதற்கு உதவியாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com