நம் மனம் நம் கையில்: பகுதி 1 - எண்ணம் நல்ல எண்ணம்!

எதிர்மறை எண்ணங்களை மாற்றி உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி.
Mental Wellness | மன நலம்
Mental Wellness | மன நலம்AI Image
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...

தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.

சந்தா செலுத்த...

எண்ணம் நல்ல எண்ணம் - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer

மனம் என்பது நமக்குள் இருக்கும் மிகப் பெரிய ஒரு சக்தி. அது அடிக்கடி மாறும் தன்மையுடையது. டைனமிக் எனர்ஜி என்று சொல்வார்கள். அப்படி மாறும்பொழுது சில சமயம் நமக்கே எதிரியாகவும் இந்த மனம் செயல்படுவதுண்டு.

தனலக்ஷ்மியின் அனுபவமும் அதுதான். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியத்துடன் இருந்தார். இன்று அவருக்கு வயது 45.

"எந்த வியாதியும் எனக்கு வந்ததில்லை. மற்றவர்களுக்கு ஜுரம் வந்தாலும் எனக்கு எதுவும் வராது. அப்படித்தான் நான் இருந்தேன் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகத் திரும்பத் திரும்ப ஏதாவது ஒன்று எனது ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. மிகவும் சிரமப்படுகிறேன். மனம்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்..." மிகவும் உருக்கமாகச் சொன்னார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com