

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
மனம்... அன்பையும் பொழியும் கோபத்தையும் உமிழும்! - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer
ஒருவர் மீது அன்பைப் பொழியும் அதே மனம் சில சந்தர்ப்பங்களில் வெறுப்பையும் உமிழ்கின்றதே! அப்படியென்றால் அந்த அன்பு பொய்யானதா?
கௌசல்யாவின் மன உளைச்சலுக்குக் காரணம் இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான். ஒரு பக்கம் அவரது கணவர். நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவர் துவங்கி இன்றும் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் தொழில். மறுபக்கம் அவரது 35 வயது மகள். திருமணமாகி கணவருடன் மனவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று வந்துவிட்டார். தந்தை தமது தொழிலுக்கு மகளை அறிமுகப்படுத்தினார். அதுவே அவர்களிடையே பிரச்னைக்குக் காரணமாகிவிட்டது.