

மங்கையர் மலர் இதழில், 2019 ஆம் ஆண்டு, மன நல ஆலோசகர் விஜயலக்ஷ்மி பந்தையன் அவர்கள் 'நம் மனம் நம் கையில்’ என்ற தலைப்பில் கட்டுரைகளை தொடர்ந்து 15 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
மனம் விட்டுப் பேசுங்கள்! - விஜயலக்ஷ்மி பந்தையன் - மன நல ஆலோசகர் Alpha Mind Trainer
இந்த மனம் இருக்கிறதே... பல சமயம் நடக்காத ஒன்றை நினைத்து வருந்துகிறதே தவிர அதை எப்படி நடக்க வைப்பது என்று யோசிக்க மறுக்கிறது.
காந்திமதியின் நிலையும் அதுதான். அவருக்கு வயது 55. கணவர் இல்லை. தனியாகத்தான் இருக்கிறார். ஒரே பிள்ளை. அவரும் நல்ல வேலை கிடைத்தபின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். எப்பொழுதும் அதிகம் பேசாத பிள்ளை இப்பொழுதும் அப்படித்தான். காந்திமதி தானாக போன் செய்தாலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு வைத்துவிடுவார். மருமகளும் அப்படித்தான். பிரச்னை என்று எதுவும் இல்லை. ஆனால் அன்பான வார்த்தைகளும் இல்லை.