Naarcistic | இந்த வகை நபர்களுடன் வாழவே முடியாது - ஏன்? தெரிந்துகொள்ளவது அவசியம்!

Narcissist peoples characters
Narcissist
Published on

நார்சிஸ்ட் (narcissist) என்பவர் தன்னை அதிக அளவில் மதிக்கவும், மற்றவர்களை அவமதிக்கவும், தன்னைத்தானே சிறந்தவர் என்று கருதி மற்றவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கவும் செய்யும் தன்மையுடையவர். நார்சிஸ்டிக் ஆளுமை கோளாறு (narcissistic personality disorder) என்பது ஒரு மனநலக் கோளாறு, இதில் ஒரு நபர் தன்னைத் தானே பெரிதாக்கிப் பார்க்கவும், மற்றவர்களின் கருத்தை மதிக்காமலும் இருப்பார்.

சமீப காலத்தில் அதிகமாக கேட்கப்பட்டும் இந்த வார்த்தை பலரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும். அதுவும் குறிப்பாக கணவன் - மனைவியிடையே இந்த வகை நபர் இருந்தால் அவர்கள் வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாக மாறிவிடும் என்றே மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வகை நபர்களுடன் வாழ்வதே பெரிய பிரச்சனையாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் மற்ற நபர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவே மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychiatric Association) வரையறுத்துள்ள மனநலக் கோளாறுகளின் பிரிவுகள் தொகுதி ஏபிசி (Cluster A,B,C) பட்டியலில் B பிரிவில் வரக்கூடிய இந்தக் கோளாறு அதிக வலிமை கொண்டதாக இருக்கிறது.

மற்றவர்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. அதிவலிமையாக (Forceful) செயல்படக் கூடியதாகவும், சமூகத்துக்கு எதிராக செயல்படக்கூடிய பண்புகளையும் (Anti-Social) கொண்டுள்ளது. மேலும், பெருமித உணர்வு (Grandiosity), மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பது (Attention seeking) மற்றும் அடுத்தவர்களுடைய உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது போன்ற பண்புகளையும் இந்த நோய் தாக்கியவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று வரையறுத்துக் கூறப்படுகிறது.

அடுத்தவர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கும் இவர்களுக்கு எவ்வளவு பாசத்தை நீங்கள் கொடுத்தாலும் அவர்களுக்குப் புரியாது. 'அவ்வளவுதானா? இன்னும் பாராட்டலாமே' என்ற கேலியோடு உங்களைப் புறக்கணிக்க வாய்ப்பு அதிகம். பொறாமையுணர்வும் இருப்பதால், அதை மறைக்க அவர்கள் எடுக்கும் ஆயுதங்களே உண்மைகளைத் திரிப்பது (manipulation) மற்றும் சுயசந்தேகத்தை உருவாக்குவது (Gas lighting) ஆகியவை. நம் சுயமரியாதையையும், மனநிம்மதியையும் குலைக்கும் இச்செயல்களுக்கு எதிர்வினை ஆற்றினால், அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உங்களையே over react செய்வதாக குறை சொல்வார்கள்.

இந்த வகை நபர்களை எளிதில் மாற்றமுடியாது என்பதால் பலரும் இதை காரணம் காட்டி விவகாரத்து முடிவு எடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆராய்ச்சி பல ஆய்வுகளில் 77,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. அவர்கள் கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் மற்றும் நிஜ உலக சூழ்நிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு நார்சிஸ்டுகள் ஏன் அதிக அளவு விலக்கை அனுபவிக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டனர்.

"பலர் உரிமை மற்றும் ஆணவத்தின் அடிப்படையில் மட்டுமே நார்சிஸ்ட்டை நினைக்கிறார்கள். ஆனால் நார்சிஸ்டுகள் அடிக்கடி சமூக வலியை அனுபவிக்கிறார்கள் என்பதை ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகிறது," என்று சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் பட்னர் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

இந்த வகை நபர்களால் நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலோ, அல்லது நீங்களே உங்களை இந்த வகை நபராக உணர்ந்தாலோ உடனே ஒரு மனநல மருத்துவரை அணுகுவது அவசியமாகும். ஏனென்றால் இந்த குணத்துடன் யாராலும் வாழ இயலாது. இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வார்த்தையால் பலரும் தற்போது அச்சம் அடைந்து வருகின்றனர்.

முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின்   ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.

இதையும் படியுங்கள்:
பெற்றோர்களே! இரவு தூங்கும் முன், கட்டாயம் இதை செய்யுங்க!
Narcissist peoples characters

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com