வயிற்றின் பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்தாகும் நார்த்தங்காய்!

Narthangai is a medicine for stomach problems
Narthangai is a medicine for stomach problemshttps://www.santhionlineplants.com

நார்த்தங்காய் என பலராலும் அழைக்கப்படும் கொழிஞ்சி காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நார்த்தங்காயை உட்கொள்வது இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இதய ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது. நார்த்தங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மலச்சிக்கல், சிறுநீரகக் கல் நோய்களுக்கும் இது நல்ல மருந்தாகிறது. வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் நார்த்தங்காய் பெரும் பங்கு வகிக்கிறது.

குடல் செயல்பாட்டை மேம்படுத்தவும், வாய்வு, வீக்கம், குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கும் நார்த்தங்காய் பெரிதும் உதவுகிறது. இந்தக் காயின் தோலுக்கு மிகப்பெரிய மருத்துவ சக்தி உள்ளது. உடலில் வலி இருக்கும் பகுதியில் இந்தப் பழத்தின் தோலை, ஆரஞ்சு பழத் தோலை மடக்கி பிழிந்து விடுவது போல் பிழிந்து விட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்ய மூட்டு வலி மட்டுமல்ல, இடுப்பு வலி, கை கால் வலி, தலைவலி போன்ற உடலில் உள்ள எல்லா வலிகளும் பறந்தோடும்.

வயிற்றில் ஏற்படும் புண்ணிற்கு (அல்சர்) நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக விளங்குகிறது. நார்த்தங்காயை வட்ட வட்டமாய் நறுக்கி உப்பு சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வாயை துணியால் மூடி தினமும் கிளறி வெயிலில் உலர்த்தி வரவும். 40 நாட்கள் கழித்து அதிலிருந்து தினமும் ஒரு துண்டை எடுத்து காலையிலும் மாலையிலும் சாப்பிட, வயிற்றுப்புண் குணமாகும்.

நார்த்தங்காய் ஊறுகாய்
நார்த்தங்காய் ஊறுகாய்https://aloeloveet.life

நார்த்தங்காயை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர, இரத்தத்தை சுத்திகரிக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும். நார்த்தங்காய்க்கு பசியை தூண்டும் தன்மை உள்ளது. சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக உப்பிக்கொண்டு கஷ்டப்படுவார்கள். அந்த சமயத்தில் இந்த நார்த்தம் பழத்தின் சாறை பிழிந்து வெந்நீர் கலந்து பருகி வர வயிற்றுப் பொருமல் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
வாய் துர்நாற்றத்தைப் போக்க இயற்கை முறையில் சில ஆலோசனைகள்!
Narthangai is a medicine for stomach problems

மேலும், நார்த்தங்காயின் தோல் பகுதி, வயிற்றுப்போக்கை நிறுத்தும் தன்மை கொண்டது. இதனை ஜூஸ், பச்சடி, ஊறுகாய் கலந்த சாதம் என வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தி நலம் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com