மழைக்கால விஷக் காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் இயற்கை மூலிகைகள்!

Dengue fever child
Dengue fever childhttps://tamil.boldsky.com
Published on

ழைக்காலம் தொடங்கி விட்டாலே, கொசுக்களின் தொல்லையும் அதிகமாகிவிடும். கொசுக்களினால் நாம் பல்வேறு உடல் நலப்பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். கொசுக்கள் கடிப்பதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விஷக்காய்ச்சல் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறோம். இப்படி, கொசுவால் பரவும் டெங்கு மற்றும் காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்கள் இருக்கும். மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம்,உடல்வலி, தலைவலி போன்ற பிரச்னைகளை உருவாக்கும். இப்பிரச்னைகளை குணமாக்க சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் உள்ளன.

கொசுக்களினால் உண்டாகும் காய்ச்சலை குணமாக்க பப்பாளி இலைச்சாறு 20மி.லி. காலை, மாலை அருந்தலாம். கால் டீஸ்பூன் கிச்சிலி கிழங்கு பொடியுடன் தேன் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும். அமுக்கிரா இலைப்பொடி, கிழங்கு பொடி இரண்டையும் கலந்து நீர் சேர்த்து கஷாயமாக்கி அருந்தலாம்.

கோரைக்கிழங்கு, சுக்கு, சிறுவழுதலை வேர்,கண்டங்கத்தரி, கண்டு பரங்கி ஆகியவற்றை சம அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் இட்டு கஷாயமாக்கி அருந்தலாம். 30 மி.லி. நிலவேம்பு கஷாயத்தை காலை, மாலை அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும். மருதம் பட்டை பொடி கால் டீஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்த நல்ல குணம் கிடைக்கும்.

தூதுவளை, இம்பூறல், சங்கன் வேர், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி கஷாயமாக்கி அருந்த நல்ல குணம் கிடைக்கும். 30 மி.லி. ஆடாதொடை இலைச்சாற்றை தேன் கலந்து அருந்தலாம். நொச்சி இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்க விஷக்காய்ச்சல் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
3 நாட்களில் கல்லீரலை சுத்தம் செய்யும் வழிமுறைகள்! 
Dengue fever child

முருங்கை வேர், மூங்கில் வேர், அருகம்புல் வேர் இவற்றை சம அளவு எடுத்து பொடித்து அவற்றை கால் டீஸ்பூன் அளவு நீரில் கலந்து உண்ணலாம். ஒரு டேபிள் ஸ்பூன் குதிரை வாலி சிறுதானியத்தை இளநீருடன் அரைத்து உண்ணலாம். சிற்றாமுட்டி, சீந்தில், பற்படாகம் சம அளவு எடுத்து நீர் சேர்த்து காய்ச்சி அருந்தலாம். வெள்வேல் பொடி கால் டீஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.

பொன் முசுட்டை வேர்ப்பொடி கால் டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து உண்ணலாம். சதாவேரிக் கிழங்கு பொடி கால் டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்ணலாம். கால் டீஸ்பூன் ஈச்சர மூலி வேர்ப் பொடியை தேன் கலந்து உண்ணலாம். சிறுகுறிஞ்சான் பொடியை கால் டீஸ்பூன் நீரில் கலந்து உண்ணலாம்.

பல நன்மைகள் கொண்ட மேற்கூறிய சித்த மூலிகைகளை மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்தி கொசுக்களிலிருந்து தற்காத்து உடல் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com