
சீரகத்தை வறுத்து பொடி ஆக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் வயிற்று வலி வயிற்றுப்போக்கு குணமாகும்.
ஒரு கையளவு ஓமத்துடன் மூன்று வெற்றிலை சேர்த்து நன்றாக இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருகினால் வயிற்றுப் பொருமல் குணமாகும்.
மணத்தக்காளி கீரையை துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் குடல் புண் ஆறும்.
ஒரு தேக்கரண்டி பெருங்காயத்தை பொடித்து இடித்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும்.
துளசி சாறு கல்கண்டு சேர்த்து கஷாயமாக்கி காய்ச்சலின் போது கொடுத்தால் வாந்தி நிற்கும்.
மஞ்சள் தூளை தேனில் கலந்து குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறிவிடும்.
எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
ஒரு டம்ளர் அண்ணாசி பழச்சாறுடன் மிளகு தூள் சேர்த்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கிவிடும்.
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை பாரம் தலைவலி குறையும்.
கற்பூரவள்ளி சாற்றுடன் பனங்கற்கண்டு கலந்து குடித்தால் இருமல் நீங்கும்.
கரிசலாங்கண்ணி இலையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
தினமும் ஒரு செவ்வாழை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.
பசும்பாலில் 10 பூண்டு பற்களை போட்டு காய்ச்சி குடித்தால் வயிற்றில் வாய்வு சேராது .இஞ்சியை அரைத்து சிறிது சாறு எடுத்து பசும்பாலில் கலந்து குடித்தால் எல்லாவித வாயுகோளாறும் நீங்கும்.
வெந்தயக்கீரை, தூதுவளைக் கீரை / வல்லாரை, முடக்கத்தான் கீரை சாப்பிட்டு வந்தால் வாயுவை போக்கும்.
புதினா கீரையை நெய் விட்டு வதக்கி உப்பு ,புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் வாய்வு அகலும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)