மன அழுத்தத்தைப் போக்கும் இயற்கை உணவுச் சாறுகள்!

நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் சாறுhttps://tamil.webdunia.com
Published on

தற்கெடுத்தாலும் மனதை அதிகம் அலட்டிக்கொள்வதே மன அழுத்தத்திற்குக் காரணம். அடைய விரும்பும் பொருள், லட்சியத்தை எட்ட ‌முடியாமல் போவது, பதற்றமாக செயல்படுதல், உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் போன்றவை டென்ஷனை கூட்டி மன அழுத்தம், பதற்றத்தை அதிகரிக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் உடலில் ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டாக்கி நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தொற்று நோய் வரும். இரத்தக் கொதிப்பு, அல்சர், சோரியாஸிஸ் உண்டாகும். உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை மன அழுத்தத்தைப் போக்கும்.

அமுக்கரா கிழங்கு, அஸ்வகந்தா மன அழுத்தத்தைப் போக்கும். இவை சிறந்த மருந்தாக நரம்புகளை பலப்படுத்தும். ‌வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பல நன்மைகளைத் தரும். தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்த உடல், மன ஆரோக்கியம் மேம்படும்.

பீன்ஸ், பருப்பு வகைகளும் மன அழுத்தத்தைக் குறைக்கும். செரடோனின் ஹார்மோன் சுரப்பு குறைவதால் மன அழுத்தம் ஏற்படும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் வைட்டமின் பி கொண்டது. டென்ஷனைக் குறைக்க பழச்சாறுகள், லஸ்ஸி, ஏலக்காய், கொத்தமல்லி, புதினா சேர்த்துக்கொள்வது நல்லது.

பாதாம் பருப்பு, தேங்காய் போன்றவையும் மன அழுத்தத்தை குறைக்கும். சீரகத் தண்ணீர் உடலுக்கு வலிமை சேர்க்கும். ஜாதிக்காய் ஆண்மை பெருக்கி, டென்ஷனை குறைக்கும். மனதை அமைதிப்படுத்தும். ஏலக்காய் சேர்க்கப்பட்ட பழச்சாறும் ஆண்மையைப் பெருக்கி, ஞாபக சக்தியை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 5 விஷயங்கள்!
நெல்லிக்காய் சாறு

அதிமதுரம் கலந்த ஜூஸ், சர்பத் உடலை வலுவாக்கி எண்ணத்தை மேம்படுத்தும். ஓட்ஸ் கஞ்சியாகவோ, தயாரிக்கும் ஜூஸில் பவுடராகவோ சேர்த்துக்கொள்ள மன அழுத்தத்தை குறைக்கும். வாழைப்பழம் நல்ல தூக்கத்தை, மன அமைதியைத் தரும். வேர்க்கடலை சேர்த்த சாக்லேட் சிரப்போ, ஸ்மூதியோ சாப்பிட மனம் உற்சாகமாகும்.

மொத்தத்தில் காய்கறி , பழங்கள், தானியங்கள் சேர்த்து ஜூஸை அருந்தி வந்தால் மன அழுத்தத்தைப் போக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com