கிரியேட்டினின் என்பது நம் உடலில் உள்ள தசைகளால் உற்பத்தி செய்யப்படும் ஒரு இயற்கையான பொருள். இது தசை செயல்பாட்டிற்கு அவசியம் என்றாலும், இதன் அளவு அதிகரிப்பது சிறுநீரகப் பிரச்சனைகளைக் குறிக்கலாம். கிரியேட்டினின் அளவைக் குறைக்க மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், இதற்கு இயற்கையான வழிகளும் உள்ளன. இந்த பதிவில் கிரியேட்டினின் அளவைக் குறைக்க உதவும் இயற்கை வழிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தண்ணீர் அதிகம் குடிக்கவும்: நீர் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதில் அதிகமாக உடலில் இருக்கும் கிரியேட்டினினும் வெளியேற்றப்படும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, கிரியேட்டினின் அளவைக் குறைக்க உதவும்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும்: பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். நாச்சத்து செரிமானத்தை எளிதாக்கி, உடலில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இது சிறுநீரகங்களின் சுமையைக் குறைத்து கிரியேட்டினின் அளவை வெகுவாகக் குறைக்கிறது.
புரதம் உட்கொள்வதைக் குறைக்கவும்: புரதம் உட்கொள்வது உடலுக்கு மிகவும் அவசியமானது என்றாலும், அதிக அளவு புரதம் சிறுநீரகங்களில் சுமையை அதிகரிக்கும். எனவே, புரத உட்கொள்ளலை மிதமாக வைத்திருப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்யவும்: தினசரி மிதமான உடற்பயிற்சி செய்வது, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். ஆனால், கடுமையான உடற்பயிற்சி, சிறுநீரகங்களில் சுமையை அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும்.
மூலிகை சிகிச்சை: சில மூலிகைகள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி கிரியேட்டினின் அளவை குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. ஆனால், நீங்களாகவே மூலிகை சிகிச்சைகளை முயற்சிப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு முயற்சிக்கவும்.
உப்பு உட்கொள்வதைக் குறைக்கவும்: அதிகமாக உப்பு உட்கொள்வது ரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களில் சுமையை அதிகரிக்கும். எனவே, உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது, கிரியேட்டினின் அளவைக் குறைக்க உதவும்.
உடலில் கிரியாட்டினின் அளவு அதிகரிப்பது ஒரு தீவிரமான பிரச்சனை. இதை சமாளிக்க முதலில் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மேற்கண்ட இயற்கை முறைகள் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் ஆதரவாக இருக்குமே தவிர, இவற்றால் முழு தீர்வு கிடைத்துவிடும் என்று எந்த உத்திரவாதமும் அளிக்க முடியாது. எனவே, இவற்றை நீங்கள் முயற்சிப்பதற்கு முன்பு மருத்துவரை அலசிப்பது கட்டாயம்.