வெள்ளை உப்பு Vs பிங்க் உப்பு: எதில் அதிக நன்மைகள் தெரியுமா?

White Salt Vs Pink Salt
White Salt Vs Pink SaltImage credits: Standard salts
Published on

‘உப்பு’ என்பது கனிமங்கள் அதிகமாகக் கொண்ட சோடியம் க்ளோரைட் ஆகும். உப்பு, கடல் நீர் ஆவியாவதாலும், சுரங்கங்களில் படிந்திருக்கும் கனிமத்திலிருந்தும் எடுக்கப்படுகிறது. நாம் சாதாரணமாக வீட்டில் பயன்டுத்தும் உப்பு நிறைய Process செய்யப்பட்டு அதில் இருக்கும் அழுக்குகளை சுத்தப்படுத்தி நீக்கிய பிறகு நம்மிடம் வந்து சேர்கிறது.

உப்பில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக Anticaking agent சேர்க்கப்படுகிறது. அயோடின் குறைபாட்டை தடுப்பதற்காக அயோடினும் சேர்க்கப்படுகிறது. உப்பை பல நூற்றாண்டுகளாக சுவைக்காகவும், உணவைப் பதப்படுத்துவதற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிங்க் உப்பு இமாலயத்தில் இருக்கும் சுரங்கமான Khewra salt mineல் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உலகத்தில் உள்ள பழைமையான மற்றும் பெரிய உப்பு சுரங்மாக Khewra salt mine இருக்கிறது. இங்கிருந்து எடுக்கப்படும் பிங்க் நிற உப்பு பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவானது என்று சொல்லப்படுகிறது.

இந்த உப்பு கைகளால் எடுக்கப்பட்டு அதிகமாக Processed செய்யப்படாமல் வருகிறது. எனவே, சாதாரண உப்பைக் காட்டிலும் இது நல்லது என்று சொல்லப்படுகிறது. இயற்கையாக உப்பை எடுத்துப் பயன்படுத்துவதால், அதில் உள்ள மினரல் மற்றும் வைட்டமின்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் இருக்கும் இரும்புச்சத்தின் காரணமாகத்தான் உப்பு பிங்க் நிறத்தில் இருக்கிறது.

பிங்க் உப்பில் உள்ள அதிகமான கனிமம் நமது உடலில் உள்ள PH அளவை சரியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் செரிமானமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது நமது உடலில் உள்ள Electrolyte balanceஐ சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. பிங்க் உப்பில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
Dark chocolate Vs Milk chocolate: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது தெரியுமா?
White Salt Vs Pink Salt

சால்ட் தெரபியின் மூலமாக பிங்க் உப்பை சுவாசிப்பதால்  சுவாச சம்பந்தந்தமான பிரச்னைகள் நீங்கும். இந்த உப்பை தண்ணீரில் கரைத்து தலைக்குளிப்பதால், உப்பில் உள்ள கனிமம் தலைமுடியின் வேர்களை வலுப்பெறச் செய்கிறது, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த உப்பில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்பு உருவாவதற்கும், வலு பெறுவதற்கும் உதவுகிறது. எனவே, வெள்ளை உப்பு மற்றும் பிங்க் உப்பு இரண்டுமே சோடியம் க்ளோரைட் என்றாலும் பிங்க் உப்பில் உள்ள இதர கனிமங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக மக்கள் நம்புவதால், பிங்க் உப்பை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com