நீரிழிவு நோய்க்கு நிவாரணமாகும் நித்திய கல்யாணி பூ!

நீரிழிவு நோய்க்கு நிவாரணமாகும் நித்திய கல்யாணி பூ!

யற்கை நமக்கு பல மருத்துவ குணமுள்ள தாவரங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. அப்படி கிடைத்த ஒரு வரப்பிரசாதம்தான் நித்திய கல்யாணி பூ. இதை சுடுகாட்டு பூ என்றும் சொல்வார்கள். இந்தப் பூக்களை சாலையோரங்களில் பார்த்திருப்பீர்கள். இதை யாரும் தலையிலும் வைக்கமாட்டார்கள். வெறும் அழகிற்காக என்று நினைத்து நாம் கடந்து செல்கிறோம். ஆனால், இந்தப் பூவில் உள்ள நன்மைகள் தெரிந்தால் யாரும் விடமாட்டார்கள்.

இயற்கை மருத்துவத்தில் நித்திய கல்யாணி என்ற பூ ஏராளமான பயன்களை கொடுக்கிறது. இதன் பூ, தண்டு மற்றும் வேர்கள் ஆகிய அனைத்தும் மருத்துவ பயன்கள் கொண்டவை. இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களை இது குணப்படுத்துகிறது. மாதவிடாயின்போது ஏற்படும் நோய்களுக்கும் இது தீர்வளிக்கும்.

பசுமையான தோற்றம் கொண்ட இது 1 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை வளரும். இது உலகம் முழுக்க வளர்கிறது. நித்திய கல்யாணி இளஞ்சிவப்பு மற்றும் பால் போன்ற வெள்ளை நிறங்களில் இருக்கும். இந்தப் பூக்கள் நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையவை. மேலும், இது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

நித்திய கல்யாணி பூக்களுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்து வர, ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். மேலும் நீரிழிவு பிரச்னைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். இவை அனைத்தையும் ஒரு இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com