
பேரிச்சம்பழம் ஒரு சத்தான உணவு என்பதில் சந்தேகமில்லை. நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது "சூப்பர் ஃபுட்" என்று அழைக்கப்படுகிறது. ஆனால், எந்த ஒரு உணவையும் சரியான நேரத்தில், சரியான முறையில் உட்கொண்டால்தான் அதன் முழுப் பலனையும் பெற முடியும். பேரிச்சம்பழத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலானோர் சில பொதுவான தவறுகளைச் செய்கின்றனர், இதன் விளைவாக நன்மைகளுக்குப் பதிலாக உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
பேரிச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள்: பேரிச்சம்பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக விளங்குகிறது. அவற்றில் சில முக்கியமானவை, நார்ச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த பேரிச்சம்பழத்தை தவறான முறையில் உட்கொள்வதால், அதன் பலன்களை முழுமையாகப் பெற முடியாமல் போவது மட்டுமல்லாமல், சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
பேரிச்சம்பழம் சாப்பிடும் போது பெரும்பாலானோர் செய்யும் பொதுவான தவறுகள்:
வெறும் வயிற்றில் சாப்பிடுவது: இதுதான் மிகவும் பொதுவான மற்றும் ஆபத்தான தவறு. பேரிச்சம்பழத்தில் அதிக அளவு சர்க்கரை (சுமார் 90%) உள்ளது. வெறும் வயிற்றில் அவற்றை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கிறது. இது இன்சுலின் சுரப்பைத் தூண்டி, நாளடைவில் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
அதிக அளவில் சாப்பிடுவது: எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது தீங்கு விளைவிக்கும். பேரிச்சம்பழமும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிக அளவில் சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, செரிமானப் பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை அளவுகளில் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். தினசரி 2-3 பேரிச்சம்பழம் சாப்பிடுவது சிறந்தது.
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது: பேரிச்சம்பழம் சாப்பிடுவதற்கு சில உகந்த நேரங்கள் உள்ளன. அவற்றை மீறி சாப்பிடுவது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பேரிச்சம் பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் காலை தான். அதுவும் உணவு உட்கொண்ட பிறகு சாப்பிடுவது நல்லது.
பிற உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடாமல் இருப்பது: சில உணவுப் பொருட்களுடன் பேரிச்சம்பழம் சேர்த்து சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்துக்களை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும்.
பேரிச்சம்பழம் ஒரு சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதை சரியான முறையில் உட்கொண்டால்தான் அதன் முழுப் பலனையும் பெற முடியும்.