உடலுறுப்புகளைக் காக்கும் உன்னத உணவுகள்!

Healthy Foods
Healthy Foodshttps://www.freepressjournal.in
ஜெயகாந்தி மகாதேவன்

என் பெயர் ஜெயகாந்தி. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து பள்ளி இறுதி வகுப்பு வரை அங்கு பயின்று வந்தேன். பிறகு என் பதினெட்டாவது வயதில் சென்னைக்கு குடி பெயர்ந்தேன். அங்கு தட்டெழுத்து சுருக்கெழுத்து பயின்று சுமார் நாற்பது ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணி புரிந்து, ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பின் எழுத்தில் ஆர்வம் கொண்டு சில பெண்கள் பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். கல்கி குழுமத்தினரின் ஊக்குவிப்பால் சிறுகதை, கவிதை, கட்டுரை என பல தலைப்புகளிலும் எழுதியுள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Updated on: 

நம் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் காப்பதற்கு நாம் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகளைத் தேடித் தேடித் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வருகிறோம். நம் உடலின் உள்ளிருக்கும் ஒவ்வொரு முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியதைக் காக்க உதவும் குறிப்பிட்ட சில வகை  உணவுகளும் உள்ளன. எந்தெந்த உணவுகள் எந்த உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன என்ற விவரத்தை இந்தப் பதிவில் காணலாம்.

1. இதயம்: இதய ஆரோக்கியம் காப்பதில் பேக் (Baked) செய்யப்பட்ட உருளைக் கிழங்கு, புரூனே (உலர்ந்த பிளம்ஸ்), மாதுளம் பழம் ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன.

2. நுரையீரல்: புரோக்கோலி, ஸ்பிரௌட்ஸ் (Sprouts), போக் சோய் (Bok Choy) ஆகியவை நுரையீரல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த பெரிதும் உதவி புரிகிறது.

3. கண்கள்: முட்டை, மக்காச் சோளம், கேரட் ஆகியவை நம் கண்களைக் 'கண்ணும் கருத்துமாய்க்' காக்கக் கூடியவை.

4. கோலன் (பெருங்குடல் பகுதி): பெருங்குடலின் ஒரு பகுதியாகிய கோலனை ஆரோக்கியமாய் வைத்திருக்க பீன்ஸ் மற்றும் லெக்யூம்ஸ் (பயறு வகைகள்) பெரிதும் உதவுகின்றன.

5. மூளை: மூளையின் ஆரோக்கியத்திற்கு வால்நட் மற்றும் சால்மன், துனா, சர்டைன்ஸ் போன்ற மீன் வகைகள் நல்ல முறையில் உதவி புரிபவை.

இதையும் படியுங்கள்:
சிக்கனம் என்பது வரவா? செலவா?
Healthy Foods

6. எலும்புகள்: எலும்புகளின் ஆரோக்கியம் காக்க பால் மற்றும் சோயா பீன்சில் தயாரிக்கப்பட்ட பானங்கள் அதிகளவில் உதவக் கூடியவை.

7. புரோஸ்டேட்: புரோஸ்டேட் என்னும் சுரப்பி சிறந்த முறையில் செயல்பட க்ரீன் டீ மற்றும் பச்சைக் காய்கறிகள் பெரிய அளவில் உதவி புரியும்.

மேற்கூறிய உணவுகளை நாமும் அடிக்கடி உட்கொண்டு ஆரோக்கியம் காப்போம்.