Hepatic Steatosis: அதிகரித்து வரும் கொழுப்பு கல்லீரல் நோய்! மது அருந்தாதவர்களுக்கும் ஆபத்து!

Hepatic Steatosis
Hepatic Steatosis
Published on

கொழுப்பு கல்லீரல் (fatty liver) நோயை ஆங்கிலத்தில் Hepatic Steatosis என அழைப்பார்கள். இது கல்லீரல் உயிரணுக்களில் கொழுப்பு படிவதால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை. இதனால் உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழுப்பு கல்லீரல் அதன் ஆரம்பக் கட்டத்தில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும், அதன் சில எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்து கொள்வதால் சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து சரி செய்ய பெரிதளவில் உதவும். 

கொழுப்பு கல்லீரல் பிரச்னை அதன் ஆரம்ப கட்டங்களில் எந்த குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனையின்போது அல்லது தற்செயலாக மற்ற உடல்நல பிரச்னைகளை பரிசோதிக்கும் போது மட்டுமே இந்த நிலை கண்டறியப்படலாம். இருப்பினும் இந்த நோய் தீவிரமடையும்போது சில குறிப்பிடத்தக்க அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். 

1. சோர்வு மற்றும் பலவீனம்: கொழுப்பு கல்லீரல் பிரச்னை கொண்ட நபர்கள் அனுபவிக்கும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று அதிகப்படியான சோர்வு மற்றும் பலவீனத்தை உணர்வதாகும். இது மோசமான கல்லீரல் செயல்பாட்டால் ஏற்படலாம். இது உடலின் வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகள் மற்றும் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கிறது. 

2. அடிவயிற்று அசௌகரியம்: கொழுப்பு கல்லீரல் உள்ள சிலருக்கு அடிவயிற்றில் லேசானது முதல் மிதமான வலி அல்லது அசௌகரியம் ஏற்படலாம். இருப்பினும் இத்தகைய வலி பல்வேறு காரணங்களைக் கொண்டிருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

3. எடை இழப்பு அல்லது அதிகரிப்பு: திடீரென உடல் எடை இழப்பு அல்லது உடல் எடை அதிகரிப்பு ஆகிய இரண்டும் கொழுப்பு கல்லீரல் தொடர்புடையதாக இருக்கலாம். பசியின்மை அல்லது வளர்ச்சிக் கோளாறுகள் காரணமாக சில நபர்கள் விவரிக்க முடியாத எடை இழப்பை சந்திக்க நேரிடும். சிலருக்கு இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக வயிற்றுப் பகுதியில் எடை அதிகரிப்பதைக் காணலாம். 

4. மஞ்சள் காமாலை: சில அரிதான சந்தர்ப்பங்களில் கொழுப்பு கல்லீரல் நோயால் மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். 

எனவே, இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம். இத்தகைய அறிகுறிகள் கொழுப்பு கல்லீரல் இருந்தால்தான் வரவேண்டும் என்றில்லை, வேறு சில உடல்நலப் பிரச்னைகளாலும் வரலாம்.

இதையும் படியுங்கள்:
Complete Guide: சரிவிகித உணவின் முக்கியத்துவம் அறிவோம்... முழு விவரங்கள் இங்கே...
Hepatic Steatosis

இருப்பினும் நீங்கள் தொடர்ந்து சோர்வு, விவரிக்க முடியாத எடை மாற்றங்கள், வயிற்று அசௌகரியம் அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகளை அனுபவித்தால், ஒரு சுகாதார நிபுணரை அனுப்புவது நல்லது. இதனால் நோயை விரைவாகக் கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையளிக்க முடியும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com