எலுமிச்சை ஊறுகாய்க்கு மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்துக்கும் என்பது தெரியுமா?

Not just for lemon pickles; Did you know that it is also good for health?
Not just for lemon pickles; Did you know that it is also good for health?https://news.lankasri.com
Published on

லுமிச்சை அனைவராலும் வாங்கக்கூடிய சத்து நிறைந்த, விலை மலிவான அதிசயக்கனி என்றால் மிகையில்லை. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது. இதன் இலை, காய், பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு எலுமிச்சை பழச் சாறு அருந்தலாம்.

எலுமிச்சைக் கனி வயிற்று வலி, வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், கண் வலி போன்றவற்றை சரியாக்கும். எலுமிச்சை இலையுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட பித்த வாந்தி, ஜீரண குறைபாடு, வாய்வு பிடிப்பு குணமாகும்.

எலுமிச்சை இலையை அரைத்து மூட்டுவலி, கெண்டைக்கால் வலி ஆகியவற்றுக்கு பற்று போட, உடனே வலி மறையும். எலுமிச்சை சாறில் வெந்நீர் சேர்த்து தொடர்ந்து அருந்த வர, சருமம் பளபளப்பாகும்.

எலுமிச்சை சாறுடன் கிளிசரின் கலந்து முகத்தில் தடவி வர, முகத்தில் புண்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். எலுமிச்சங்காயை ஊறுகாயாக உப்பு, காரம் குறைவாக செய்து சாப்பிட பித்தம் தணியும். வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

எலுமிச்சம் பிஞ்சை ஊறுகாயாக தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்ள மலச்சிக்கல் நீங்கும். ரத்த மூலம் குணமாகும். எலுமிச்சம் பூவை மை போல அரைத்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் சாறு உப்பு சேர்த்து காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர பல்வலி, ஈறு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
தென்னகத்தின் எல்லோரா வெட்டுவான் கோயில்!
Not just for lemon pickles; Did you know that it is also good for health?

எலுமிச்சை இலையை அரைத்து நெற்றிப் பொட்டில் பற்று போட தலைவலி தீரும். களைப்பைப் போக்கும். பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் எலுமிச்சம் சாறு விட்டு தேய்க்க, கடுகடுப்பு நீங்கும். வலி ஏற்படாது.

முக அழகை தருவதிலும் எலுமிச்சைக்கு தனி இடம் உண்டு. காய்ந்த எலுமிச்சை தோல், பாசிப்பயறுடன் அரைத்து தலைக்குக் குளிக்க பொடுகுத் தொல்லை நீங்கும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறை அருந்தி வர, உடலுக்குப் பல்வேறு நன்மைகள் தரும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com