உடலுக்கு உரமேற்றும் கடுக்காய் பொடி மகத்துவம்!

உடலுக்கு உரமேற்றும் கடுக்காய் பொடி மகத்துவம்!
https://minnambalam.com

‘கம்பு ஊன்றும் கிழவனும் கடுக்காய் சாப்பிட்டால் கம்பீரமாய் நடப்பான்’ என்ற பழமொழியை கிராமத்தில் இன்றும் கூறுவார்கள். கடுக்காயின் தாயகம் இந்தியா. கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல்தான் வளரும். இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

கடுக்காயில் உவர்ப்புச் சுவை தவிர இன்னும் ஐந்து வகை சுவைகள் அடங்கியுள்ளன. கடுக்காயின் தோலில் டேனின் என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இது விலங்குகளின் தோல்களைப் பதப்படுத்தவும், துணிகளுக்கு வேண்டிய சாயம் தயாரிக்கவும், நிலக்கரியில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்யவும், தோலின் சக்கை பசை, காகிதம் தயாரிக்கவும், பழங்காலத்தில் கட்டடத்திற்கு வலிமையாக்க கலவையுடன் இதன் சாறை பயன்படுத்தினார்கள்.

கடுக்காய் ஓட்டை தூள் செய்து இரவு சாப்பிட்டபின் அரை ஸ்பூன் பொடியுடன் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க உடல் வலுவாகும். வாத நோய் தீரும். கடுக்காய் தூள் 1 ஸ்பூன், 1 ஸ்பூன் சுக்குத் தூள், 1 ஸ்பூன் திப்பிலித் தூள் கலந்து காலை, மாலை சாப்பிட, வாத வலி, பித்த நோய்கள் குணமாகும். கடுக்காய் தூளை மூக்கில் நுகர்ந்தால் மூக்கில் இரத்தம் வருவது நிற்கும். கடுக்காயை சந்தனக் கல்லில் உரைத்து சருமத்தில் படை நமைச்சல், ஊறல் இருந்தால் அந்த இடங்களில் தடவி வர சருமப் பிரச்னைகள் தீரும்.

இதையும் படியுங்கள்:
எழுபது அடி ஆழத்தில் மூழ்கியுள்ள சங்கு சிவராத்திரி நாளில் மட்டும் தென்படும் அதிசயக் கோயில்!
உடலுக்கு உரமேற்றும் கடுக்காய் பொடி மகத்துவம்!

கடுக்காய் பொடியை கொண்டு பல் தேய்த்தால் பற்கள் உறுதியாகும். பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தம், வலி குணமாகும். கண் நோய்கள்  குணமாகும் சக்தி கடுக்காய்க்கு உண்டு. இது உடல் உள்ளுறுப்புகளுக்கு எதிர்ப்பு சக்தியை தரும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உடைய மூலிகையாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு, மூட்டு வலியையும் கடுக்காய் பொடி சரி செய்யும். கடுக்காய் பொடி மலச்சிக்கலை சரி செய்யும். வீட்டில் இப்பொடி செய்யும் போது அதன் விதை நீக்கி செய்ய வேண்டும். கடுக்காய் பொடியை உபயோகப்படுத்தும்போது  அதை மருத்துவர்களின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com