Ketogenic Diet இருப்பதால் இவ்வளவு நன்மைகளா? 

Benefits of the Ketogenic Diet.
Benefits of the Ketogenic Diet.

உடல் எடையைப் பராமரிக்க விரும்புபவர்கள் டயட் இருப்பது வழக்கம். அதாவது உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு, தங்களின் உடல் எடையைக் குறைக்க முயல்வார்கள். இத்தகைய டயட் முறைகளில் பல்வேறு விதங்கள் இருந்தாலும், Ketogenic Diet முறையானது சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமாக உள்ளது. கீட்டோ டயட் என்பது குறைந்த கார்போஹைட்ரேட், அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும். இது கீடோசிஸ் எனப்படும் வளர்ச்சிதை மாற்ற நிலைக்கு உடலை ஊக்குவிக்கும்.  

உடல் எடையைக் குறைப்பதற்கு அதிக அளவு கொழுப்பை உண்பது எதிர்மறையாகத் தோன்றினாலும், கீட்டோ டயட் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, உடல் எடை குறைவதையும் தாண்டி பல நன்மைகளைக் கொடுப்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த பதிவில் கீட்டோ டயட்டை பின்பற்றுவதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

எடை இழப்பு: இந்த டயட் முறையில் கார்போஹைட்ரேட் உட்கொள்வதை கணிசமாகக் குறைப்பதன் மூலம், உடல் கீடோசிஸ் நிலைக்கு மாறி, உடலின் ஆற்றல் தேவைக்கு கொழுப்பை எரிக்கிறது. இந்த வளர்ச்சிதை மாற்றமானது, விரைவான கொழுப்பு இழப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் எடையைக் குறைக்க வழிவகுக்கும். குறிப்பாக இந்த டயட் முறையால் உடலின் மசில் மாஸ் குறையாமல் பராமரிக்கப்படுகிறது. 

அதிக ஆற்றல்:  கீட்டோ டயட் முறையைப் பின்பற்றும் பலர் அதிக ஆற்றல் மற்றும் மேம்பட்ட மனத் தெளிவை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கார்போஹைட்ரேட் கட்டுப்பாட்டின் மூலம் ரத்த சக்கரை அளவு நிர்வகிக்கப்படுவதால் இது விரைவான ஆற்றல் இழப்பைத் தடுக்க உதவுகிறது. 

குறைந்த பசி: சராசரியான உணவுக் கட்டுப்பாடு முறைகளில் மிகப்பெரிய சவாலாக இருப்பது பசியைக் கையாள்வது தான். கீட்டோ டயட்டில் உள்ள அதிக கொழுப்பு உள்ளடக்கம், திருப்தியான உணர்வை ஏற்படுத்துகிறது. உடல் கீடோசிஸ் நிலையில் இருக்கும்போது குறைவான பசி ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால், பசியைக் கட்டுப்படுத்தி அதிக உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. 

இதய ஆரோக்கியம் மேம்படும்: அதிக கொழுப்பு உட்கொள்வது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டாலும் கீட்டோ உணவுகள் உண்மையில் இருதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்வதைக் குறைப்பதால், HDL கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இது நல்ல கொலஸ்ட்ரால் என்பதால், ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. 

ரத்த சக்கரை கட்டுப்பாடு: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கீட்டோ டயட் இருப்பது மூலமாக ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த முறையில் கார்போஹைட்ரேட் குறைவாக உட்கொள்ளப்படுவதால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு வெகுவாக குறைகிறது. இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு நிலையாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
கோடையில் ஆரோக்கியமாக இருக்க நச்சுன்னு சில டிப்ஸ்! 
Benefits of the Ketogenic Diet.

கீட்டோ டயட் இருப்பதால் மேற்கூறிய பல நன்மைகள் கிடைத்தாலும், இதை முயற்சிப்பதற்கு முன்பு நல்ல சுகாதார நிபுணரை அணுகி அறிவுரை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com