எந்நாளும் பெண்களின் நலன் காக்கும் நுங்கு

Nungu
Nungu
Published on

பிரிட்டிஷ் காரர்கள் பனநுங்கிற்கு வைத்து பெயர் 'ஐஸ் ஆப்பிள்'. இது தாகத்தை தணிப்பது மட்டுமல்ல, பல்வேறு நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற்றது. 100 கிராம் பாலில் 3 கிராம் புரதம் இருக்கிறது. ஆனால் அதே அளவு நுங்கில் 10 கிராம் புரதம் இருக்கிறது. இதில் 60% புரதமும், 30% மாவுப் பொருளும், மிகக்குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.

நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது. தினமும் 2 அல்லது 3 நுங்கு சாப்பிட உடல் சூடு குறையும், நீர்ச்சத்தை மேம்படுத்தும், வெயில் காலத்தை தவிர, நிறைய பேர் இதைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால், எந்த காலத்திலும், கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் நுங்கு. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலநேரம் கிடையாது.

நுங்கிற்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு, இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும். அத்துடன் குடல் புண்களும் ஆறிவிடும். அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், இந்த நுங்கை சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை தீரும்.

எது சாப்பிட்டாலும் சாப்பிட்டவுடன் வயிற்றில் எரிச்சல் சிலருக்கு ஏற்படும்; சிலருக்கு வாயில், நாக்கில் புண் அடிக்கடி வந்து தொல்லை தரும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் இரண்டு நுங்கில் உள்ள சதைப்பகுதியை தனியாக எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் ஒரு டம்ளர் தேங்காய் பால் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட அனைத்தும் சரியாகும். இந்த அல்சரின் அறிகுறிகள் நாளடைவில் குறையும்.

கர்ப்பிணிகள் நுங்கை சாப்பிடும்போது, அவர்களுடைய செரிமானம் துரிதமாகும். அசிடிட்டி பிரச்சனையும் தீரும். கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு நுங்கு நல்லது. சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த நுங்கு சரி செய்கிறது.

நுங்கில் 'அந்த்யூசைன்' என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுத்து நிறுத்துகிறது. இது புற்றுநோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுவதாகவும், அதனால், பெண்கள் அதிக அளவு நுங்கு சாப்பிட்டால் போதிய பலனை அடைய முடியும் என்றும் சொல்கிறார்கள். நகங்கள் உடையாமல் வளர, தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்தை காத்து, முகப்பரு ஏற்படுவதையும் தடுக்கும் ஆற்றல் மிக்க பாயோடின் சத்து நுங்கில் உள்ளது.

அம்மை நோய்களை தடுப்பதில் நுங்கு சிறப்பாக செயல்படுகிறது. வெயிலினால் உண்டாகும், வேர்க்குரு, கொப்புளங்கள், சரும நோய்களை இந்த நுங்கு சரி செய்கிறது.

பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள். நுங்கின் நீரை தடவினாலே வேர்க்குரு மறையும். இந்த நுங்கை இளநீரில் ஊற வைத்து சாப்பிட்டால் அபார ருசியும், குளிர்ச்சியும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கான சிறந்த 5 பாதுகாப்பு செயலிகள்!
Nungu

நுங்குவில் உள்ள சாறை மட்டும் எடுத்து, அதை மெல்லிய பருத்தி துணியில் நனைத்து, கண்களில் மேல் வைத்து வந்தால், கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மறையும். கண்களில் ஏற்படும் சோர்வு சரியாகும். எந்நேரமும் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடும்போது, உடலில் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும் என்கிறார்கள்.

கர்ப்பிணிகள் காலை உணவுக்கு பிறகு நுங்கு சாப்பிட வேண்டுமாம். நண்பகல் வேளைக்கு பிறகு தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அதுமட்டுமல்ல, பக்கவிளைவுகளை நுங்கு உண்டு செய்யாது என்றாலும், மிதமான அளவு சாப்பிட்டால் நல்லது. டாக்டர்களின் பரிந்துரையுடன் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் இன்னும் சிறப்பு...!

இதையும் படியுங்கள்:
தினமும் புஷ்-அப் செய்வதால் உடலில் ஏற்படும் அதிசயமான மாற்றங்கள்....
Nungu

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com