கொடியில் காய்க்கும் காய்கறிகளில் கொட்டிக்கிடக்கும் சத்துக்கள்!

கொடியில் காய்க்கும் காய்கறிகளில் கொட்டிக்கிடக்கும் சத்துக்கள்!

கொடியில் காய்க்கும் காய்கறிகளான புடலங்காய், சுரைக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், பாவக்காய் போன்றவற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. இவை எல்லாப் பருவகாலத்திலும் காய்க்கக்கூடியவை. அதனால் எளிதாக கடைகளில் கிடைக்கும். விலையும் மலிவாக இருக்கும். கிராமப்புறங்களில் வீட்டு வாசலிலும், கொலைப்புறத்திலும் கொடியில் காய்த்துக் கிடக்கும்.

கொடிக்காய்களின் பொதுவான நன்மைகள்:

1. நார்ச்சத்து நிரம்பியவை. குறைந்த கலோரிகள் கொண்டவை.

2. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஏற்றவை. இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல்  போன்றவை மட்டுப்படும்.

3. இவற்றை உண்டால் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், நீண்ட நேரம் பசிக்காது. நொறுக்கு தீனிகளை  சாப்பிடத் தோன்றாது.

4. உடலில் கெட்ட கொழுப்பை நீக்கி, இரத்தத்தை சுத்திகரிக்கின்றன. இரத்த அழுத்தம், இதயநோய்  உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை தருபவை. இவர்கள் இந்தக் காய்களை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

5. உடல் எடையைக் குறைத்து, ஆரோக்கியமாக வைத்திருக்கும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது. இவை தோல் அழற்சியை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன.

6. உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகின்றன. தீவிரமான மூலம் மற்றும் மலச்சிக்கல் தீர்க்கின்றன.

7. இவற்றில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள  தேவையற்ற உப்பு நீரை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

இனி, ஒவ்வொரு காயிலும் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதைப் பற்றி பார்ப்போம்.

புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், கரோட்டீன்கள், பாஸ்பரஸ்  போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. தலை முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது. குடல் மற்றும் தொண்டைப் புண்களை ஆற்றும் சக்தி படைத்தது.

பீர்க்கங்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோவின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் உள்ளன. கண் சம்பந்தப்பட்ட நோய்களையும், கல்லீரல் தொற்றையும் சரி செய்கிறது.

அவரைக்காய் பித்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்து. வெள்ளெழுத்துக் குறைபாட்டை  நீக்கும். சளி, இருமலைப் போக்கும். உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.

பாகற்காய்  சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. உடலின் செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. உடலில் சேரும் பல வகையான நச்சுக்களை நீக்குகிறது. புற்று நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காய் வைட்டமின் பி, சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. சிறுநீரக கோளாறுகளைத் தீர்க்கிறது. அடிக்கடி தாகம் ஏற்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. தாகத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com