ஆரோக்கிய வாழ்வுக்கு ஆதாரமாகும் ஆயில் புல்லிங்!

ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங்https://mysmilesteeth.com
Published on

ல்லெண்ணெய் என்பது நம் தினசரி ‌வாழ்வில் பலவிதங்களில் நன்மை பயக்கிறது. சமையலுக்கு, உடலுக்குத் தேய்த்துக் குளிக்க என பலவாறு நல்லெண்ணெய் உபயோகப்படுத்தப்படுகிறது. இதோடு, ஆயுர்வேத மருத்துவத்தில் மசாஜ், ஆயில் புல்லிங் போன்ற சிகிச்சை முறைகளும் பழக்கத்தில் உள்ளன. நம்மில் பலர் மறந்த ஆயில் புல்லிங் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சுத்தமான நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டு, வாய் முழுவதும் படும்படி கொப்பளிக்க வேண்டும். பற்களின் இடையே எண்ணெய் படும்படி செய்யவும். வாயில் வைத்திருக்கும் எண்ணெய் நுரைத்ததும் அதைத் துப்பி விட வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை இதைச் செய்யலாம். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்வதால் உடலுக்குத் தீங்கு தரும் கிருமிகள் எல்லாம் உமிழ்நீரில் முழுமையாக வெளியேறிவிடும். இந்தப் பயிற்சியை காலை நேரத்தில் செய்யலாம். இந்த ஆயில் புல்லின் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பல.

நல்லெண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லின் செய்வதனால் உடல் குளிர்ச்சி பெற்று கண்களில் உள்ள நரம்புகள் பலம் பெறுகின்றன.

தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வதனால் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப் பட்டு, நம் சருமம் பொலிவாகக் காட்சியளிக்கும்.

ஆயில் புல்லிங், வாயில் உள்ள நச்சுகளை அகற்றி, வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுத்து, ஈறுகள் ஆரோக்கியமாக‌  இருக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வாழும் கோட்டை ஜெய்சல்மேர்!
ஆயில் புல்லிங்

மூட்டுவலி பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லின் செய்து வர மூட்டு வலி, வீக்கம் குணமாகிறது.

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் ஆயில் புல்லிங் செய்ய தைராய்டு சுரப்பி சீராக சுரக்கும். நன்றாகப் பசியைத் தூண்டி, செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. தூக்கமின்மைக்கும் தீர்வாகிறது. நல்ல மனநிலையை உண்டாக்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்ய மாதவிடாய் சுழற்சி முறையாக சீராகும்.

நல்லெண்ணெய் புல்லிங் செய்வதால் ஒற்றைத் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தைராய்டு, சரும வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் ஆயில் புல்லிங் சிறந்த தீர்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com