
பெரிய வெங்காயத்தில் வெள்ளை, சிவப்பு ,மஞ்சள் என மூன்று ரகங்கள் உண்டு. வெள்ளை வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது. வெங்காயத்தில் இருக்கும் ஆர்கனோ சல்ஃபர் காம்பவுண்ட் ரக வேதிப்பொருள் பார்வை குறைபாடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றி ரத்த அழுத்த நோய் வரும் ஆபத்தை குறைக்கும் சக்தி இதில் உள்ளது. வெங்காயத்தில் (onion health benefits) இருக்கும் குரோமியம், ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
பலன்கள்
வெங்காயத்தை பச்சையாக அரைத்து சாறு எடுத்து, அதை தலையில் எண்ணெய் போல ஊற்றி தேய்த்து, அரை மணி நேரம் ஊற விட்டு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் தலைக்கு குளித்தால் பேன்கள் ஒழியும்.
சிலருக்கு தலையில் திட்டு திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை தெரியும். இதற்கு சின்ன வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி அந்த இடத்தில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் தலைவலி குணமாகும்.
வெங்காயத்தை அரைத்து முன் நெற்றியிலும், நெற்றி பொட்டிலும் பற்று போட்டால் தீராத தலைவலி குறையும்.
பல் சொத்தையால் ஏற்படும் பற்குழியில் வெங்காயத் துண்டை வைத்து அப்படியே சில நிமிடங்கள் அழுத்தி கடிக்க வேண்டும். வெங்காயத்தின் சாறு அந்தப்பல் குழிக்குள் இறங்கி கிருமிகளுடன் போராடி பல்வலியைத் துரத்தும்.
வெங்காயச்சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்துவிட்டு வெறும் வெங்காயச்சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல் வலி, ஈறு வலி குறையும்.
வெங்காயச்சாறை சிறிது மோருடன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
முதியோருக்கு வருகிற கடுமையான இருமலை சரி செய்ய வெங்காயத்தை வதக்கி அதில் வெல்லம் கலந்து சாப்பிடலாம்.
வெங்காயத்தைப் பொடியாக அரிந்து உப்பு, தொட்டு மென்று சாப்பிட்டால் வாந்தி சரியாகும்.
வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
வெள்ளை வெங்காயத்தை நறுக்கி மிதமான சூட்டில் நெய்யில் வதக்கி சாப்பிட்டால் சீதபேதி சரியாகும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உதிரப்போக்கு பிரச்னைகளுக்கு வெங்காயத்தை வதக்கி நிறைய சாப்பிட்டால் உதிரச் சிக்கல்கள் நீங்கும்.
வெங்காய சாற்றுடன் கடுகு எண்ணெய் கலந்து மூட்டுகளில் தடவினால் மூட்டுகளில் ஏற்படும் வலி குறையும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் குறையும். பித்த ஏப்பம் சரியாகும்.
வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போட்டால் இருமலால் ஏற்படும் தொண்டை வலி குறையும்.
ரத்த விருத்திக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் வெங்காயம் உதவுகிறது. இதனால் உடல் மினுமினுப்பும் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது.