பழைய சோறு எனும் அமுதம்! ஏன் முன்னோர்கள் இதை அமுதம் என்றார்கள் தெரியுமா?

Pazhaya Soru
Pazhaya SoruImg Credit: Curry trail
Published on

பழைய சோரை நம் முன்னோர்கள் அமுதம் என்றே சொல்லி வைத்தனர். பழைய சோற்றுகாகவே அதிகமாக சமைத்து வைப்பார்கள். குறைவாக சாப்பிடும் குழந்தைகள் ஒரு கரண்டி சேர்த்து சாப்பிடுவார்கள். இதற்கு காரணம் அதில் மனிதனுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட்கள் உற்பத்தியாவது தான். இவை சிறுகுடலுக்கு அதிக நன்மையை தரும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கும் வாய்ப்பில்லை. உடல் சூடு தணியும் குடல் புண் வயிற்று புண் இருந்தால் குணமாகும் இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு அதிக நன்மையை தரும். ரத்த அழுத்தத்தை சீராக இயங்க வைக்கும்.

நாள் முழுவதும் புத்துணர்வாக இருக்கும், சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். பழைய சோற்றை மண் பாத்திரத்தில் ஊற வைத்து சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

இரவு மீதமுள்ள சாதத்தில் தண்ணீர் ஊற்றி  வைத்தால் காலையில் பழைய சோறு தயாராகிவிடும். அதில் தயிர், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தயிர் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

  • பழைய சோற்றை அதிகபட்சமாக நீர் ஊற்றி பதினைந்து மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.

  • பழைய சோற்றில் உள்ள விட்டமின் சி யானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  • தினமும் காலையில் இதை சாப்பிட்டால் எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.

  • கொளுத்தும் கோடை வெயிலுக்கு பழைய சோறு உடலுக்கு குளு குளு எனக் குளிர்ச்சியை தரும்.

இதையும் படியுங்கள்:
கோடை உஷ்ண அலையை சமாளிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!
Pazhaya Soru
  • இதை காலையில் எடுத்துக் கொள்வதால் செரிமான பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

  • நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் விடுபடலாம்.

  • தினமும் சாப்பிட்டால் உடல் சோர்வு குறைந்து எப்போதும் உற்சாகத்துடன் இருக்கலாம்.

  • உடல் எடையை குறைக்க அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இதை சாப்பிடலாம்.

  • இதில் உள்ள பி6, பி12 விட்டமின்கள் மனித உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. இப்போதெல்லாம் வடிக்கும் சோறு சமைத்த சில மணி நேரத்திலேயே கெட்டுவிடுகிறது. அதற்கு குத்தரிசி எனப்படும் சிவப்பு நிறத்தோல் அரிசியை பயன்படுத்தலாம்.

  • கோடையில் பழைய சோறு சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கிறது சூரியனால் ஏற்படும் மந்தமான தன்மையை தடுக்கிறது. அதிகாலையில் பழைய சோறை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் வராமல் தடுக்கும். அதோடு அல்சர் மற்றும் குடல் பிரச்சினை உள்ளவர்களுக்கு பழைய சோறு மருந்தாக செயல்படுகிறது.

இன்றும் பழைய சோற்றை விரும்பி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். பழமை என்றாலும் அது தான் என்றும் இனிமையானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com