

1. மூட்டு வலியைக் குறைக்க, வேப்ப எண்ணெயில் சிறிதளவு நொச்சி இலையைப் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின், வலி உள்ள இடங்களில் தேய்த்து வர, நல்ல குணம் கிடைக்கும்.
2. கிராம்பு எண்ணெய் 3 துளிகள், 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய்யுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெய்யை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டனை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்துத் தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்.
3. மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும்.
4. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றை சுற்றி உள்ள தேவையற்ற சதை கரையும்.
5. விளக்கெண்ணெய்யை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி, அதன் மேல் புளிய இலைகளை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால், கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு நீங்கும்.
6. காலையில் எழுந்ததும் காலைக்கடன் கழிக்க முடியாமல் சிரமப்படுகிறவர்கள் நெல்லிக்காய் சாறு பிழிந்து, பாலில் கலந்து உட்கொண்டால், மலச்சிக்கல் தீரும்.
7. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
8. நல்லெண்ணெய்யில் தும்பைப் பூவைப் போட்டுக் காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
9. கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காய வைத்து பவுடராக்கி தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட கண் குளிர்ச்சி பெறும்.
10. கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து குளித்து வந்தால் தலையில் அரிப்பு, பேன் தொல்லைகள் தடுக்கப்படும்.
11. மோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு அதை துப்பி விட்டு, வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
12. முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.
13. தசைப்பிடிப்பு அகல, ஒரு கிளாஸ் தண்ணீரில் வெங்காயத் தோல்களைச் சேர்த்து, குறைந்தது 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு தோல்களை அகற்றி விட்டு அந்த தண்ணீரை குடியுங்கள். தசைப் பிடிப்பு விரைவில் குணமாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)