நம் முன்னோர்கள் முதல் இன்று வரை நம்மிடையே வெற்றிலை பாக்கு போடும் பழக்கமானது தொடர்ந்து வருகிறது. அதன் வடிவங்களில் சற்று மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறதே தவிர இன்று வரை நாம் வெற்றிலை பாக்கு போடும் வழக்கத்தை பின்பற்றிக் கொண்டுதான் வருகிறோம். வெற்றிலை பாக்கு போடுவதால் கிடைக்கும் நன்மைகள், தீமைகள் என்ன என்பதை இப்பதிவில் காணலாம்.
பொதுவாகவே நம்முடைய உடல் வாதம், பித்தம், கபம் என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. இந்த வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் அளவில் கூடினாலும் பிரச்சினை தான், குறைந்தாலும் பிரச்சனை தான். இவை மூன்றும் சம அளவில் இருக்க வேண்டும்.
வெற்றிலையில் கபம் உள்ளது, சுண்ணாம்பில் வாதம் உள்ளது, பாக்கு பித்தத்தை சீராக்கும். நாம் வெற்றிலை பாக்கு போடுவதால் நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சம அளவில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. வெற்றிலை பாக்கு போடுவது ஒரு மிகச்சிறந்த மவுத்வாஷ் என்றே சொல்லலாம். மேலும் வெற்றிலை பாக்கு போடும்போது நம் உடலில் உள்ள வாய்ப்புண், வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
வெற்றிலையில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகமாக உள்ளன. வெற்றிலையை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது. வெற்றிலை பாக்கு போடும்போது சுவாச நோய்களான இருமல்,சளி ஆஸ்துமா போன்றவற்றிற்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. மேலும் வெற்றிலை பாக்கு போடுவது மூளையை சுறுசுறுப்பாக வைப்பதிலும் மிகப்பெரிய பங்காற்றுகிறது.
நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெற்றிலையை சாப்பிடும் போது சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. ரத்த அழுத்தம் உள்ளவர்களும் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வெற்றிலையை தாராளமாக சாப்பிடலாம். வெற்றிலையை தொடர்ந்து சாப்பிடும் போது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி ரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் எனும் மறதி நோய் உள்ளவர்கள் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு. அதிக செரிமானம் மிகுந்த உணவுகளை உட்கொண்ட பின் வெற்றிலை பாக்கு போடுவது செரிமானத்தை நன்கு சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து காத்துக் கொள்ள உதவுகிறது.
கொட்டைப்பாக்கு வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிடும் போது இரப்பை மற்றும் குடலை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. கொட்டைப்பாக்கில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் பற்சொத்தை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. கொட்டைப்பாக்கை நன்கு பொடியாக்கி பல் ஈறுகள் மற்றும் பற்களில் மசாஜ் செய்யும் போது பல் சம்பந்தமான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. மேலும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கும் கொட்டைப்பாக்கு ஒரு நல்ல மருந்தாகும்.
வெற்றிலை பாக்கு போடுவதில் சேர்க்கப்படும் சுண்ணாம்பில் அரிகோலின் என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. மேலும் சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்சைடு. இது வயிற்றுப் புண்களை ஆற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நல்லது தான் என்றாலும் அதில் சேர்க்கப்படும் கொட்டைப்பாக்கினால் ஏற்படும் எதிர் விளைவுகள் அதிகம். கொட்டைப்பாக்கை தொடர்ந்து சாப்பிடும் போது வாய் புற்றுநோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம். எனவே வெற்றிலை பாக்கு போடும் போது கொட்டைப்பாக்கின் அளவை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மேலும் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு இந்த மூன்றில் வெற்றிலையில் இருக்கக்கூடிய பயன்கள் மிக அதிகம் என்பதால் வெற்றிலையை தனியாக எடுத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. வெற்றிலையை ரசம் வைத்தோ, ஜூஸாகவோ, அல்லது வெற்றிலை பானமாகவோ எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும்.