ஆரோக்கியம் தரும் கிராமத்து உணவு வகைகளில் பனங்கிழங்கும் ஒன்றாகும். பனங்கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பனங்கிழங்கு குளிர்ச்சி தன்மை கொண்டது. உடலுக்கு வலுவையும், மலச்சிக்கலையும் தீர்க்கும். பனங்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக்கி காய வைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு இரும்புச் சத்து கிடைக்கும்.
பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பாதிப்பு, வயிறு பிரச்னை உள்ளவர்கள் பனங்கிழங்கு மாவு செய்து அதில் கஞ்சி, கூழ் செய்து சாப்பிட, பசி நீங்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பனங்கிழங்கில் பித்தம் அதிகம் உள்ளது. இது சாப்பிட்ட பின் மிளகு சாப்பிடுவது நலம் பயக்கும். அதேபோல், இது வாய்வு தொல்லை கொடுக்கக் கூடியது. இதைத் தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். கருப்பட்டி சேர்த்து இடித்தும் சாப்பிடலாம்.
பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளன. உடல் பலவீனமாக இருப்பவர்கள், உடல் எடை மெலிந்தவர்கள் எடை கூட வேண்டுமானால் இதைச் சாப்பிடலாம். இதில் ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
பனங்கிழங்கு இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இரத்த சோகை நோய் தீரும். இதில் புட்டு, பாயசம், தோசை, உப்புமா போன்றவை செய்தும் உண்ணலாம்.