கணையப் புற்றுநோயின் அறிகுறிகளும் காரணங்களும்!

Pancreatic cancer symptoms and causes!
Pancreatic cancer symptoms and causes!
Published on

லக அளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கணையப் புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான மற்றும் ஆபத்தான புற்று நோயாகும். இது கணையத்தில் உள்ள திசுக்களில் உருவாகிறது. கணையம் வயிற்றின் கீழ் பகுதிக்கு பின்னால் அமைந்துள்ளது. இது உணவை ஜீரணிக்க உதவும் என்சைன்களையும் இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும் ஹார்மோன்களையும் உருவாக்குகிறது.

கணைய புற்றுநோய்க்கான காரணங்கள்:

மரபணு: பரம்பரை மரபணு மாற்றங்கள் கணைய புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். கணைய வளர்ச்சி மரபணுக்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள் காரணமாக இது தோன்றலாம்.

முதுமை: 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கணைய புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன.

புகைப்பிடித்தல் / புகையிலை பயன்பாடு: புகையிலை போடுபவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்களுக்கும் கணைய புற்றுநோய் வருவதற்கான ஆபத்து காரணிகள் அதிகமாக உள்ளன.

உடல் பருமன்: அதிக உடல் பருமனாக இருப்பது கணைய புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு இன்சுலின் மற்றும் பிற ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும். இது புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

சர்க்கரை நோய்: வகை 2 நீரிழிவு கணையப் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது. எனவே, சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக சர்க்கரை அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

நாள்பட்ட கணைய அழற்சி: கணையத்தில் நீண்ட காலமாக ஏற்பட்டிருக்கும் வீக்கம் நாள்பட்ட கணைய அழற்சியை உருவாக்கும்.

உணவு முறை: சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள் கணைய புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகள் குறைவாக எடுத்துக் கொள்பவர்களுக்கும் இந்த சிக்கல்கள் தோன்றலாம். எனவே, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொழில்சார் வெளிப்பாடு: சாயம் மற்றும் பெட்ரோலிய தொழில்களில் பயன்படுத்தப்படும் சில ரசாயனங்கள் அதிக ஆபத்துகளுக்கு வித்திடக்கூடும்.

கணைய புற்றுநோயின் அறிகுறிகள்:

மஞ்சள் காமாலை: புற்றுநோய் பித்த நாளங்களை பாதிக்கும்போது சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாகிறது. இது இரத்தத்தில் பிலிருபின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.

வயிற்று வலி: நோயாளிகள் தொடர்ந்து வயிற்று வலிக்கு ஆளாகலாம். அந்த வலி முதுகிலும் பரவி பிரச்னையை தரலாம். மேலும், இது மந்தமான வலி என்று அழைக்கப்படுகிறது.

பசியின்மை: இந்த நோயின் தீவிரம் அதிகமாகும்போது பசியின்மை ஏற்படும். கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும்.

புதிதாகத் தொடங்கும் நீரிழிவு: வயதானவர்களுக்கு திடீரென்று நீரிழிவு நோயின் தாக்கம் ஏற்பட்டால் அது கணைய புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் செரிமான மண்டலத்தின் அடைப்பு அல்லது பிற சிகிச்சையின் பக்கவிளைவு காரணமாக எழலாம்.

சிறுநீர், மலத்தில் ஏற்படும் மாற்றங்கள்: இருண்ட நிறத்தில் சிறுநீரும், வெளிர் நிறத்தில் மலமும் வெளியேறும். கணையத்தின் செயல்பாடு குறைவதால், உடல் கொழுப்புகளை சரியாக உறிஞ்சாமல் போவதால் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் பிடிவாத குணத்தை சமாளிக்க 6 எளிய வழிகள்!
Pancreatic cancer symptoms and causes!

சோர்வு: உடலின் ஆற்றல் தேவைகள் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் காரணமாக கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே சோர்வு மற்றும் பலவீனத்தின் பொதுவான உணர்வு காணப்படும்.

வீக்கம்: ஒரு கை அல்லது காலில் வலி மற்றும் வீக்கம் ஏற்படலாம். இது இரத்த உறைவு காரணமாகத் தோன்றலாம்.

மனநிலை மாற்றங்கள்: நோயாளிகள் மனச்சோர்வு மற்றும் பதற்றம் உள்ளிட்ட மனநிலை மாற்றங்களை அனுபவிக்கலாம். இது நோயின் உணர்ச்சிகரமான உடல் விளைவுகளுடன் தொடர்புடையது.

கணைய புற்றுநோயை கண்டறிவது கடினமாக இருக்கும். ஏனெனில் கணையம் அடிவயிற்றில் ஆழமாக உள்ளது. இதன் அறிகுறிகள் எப்போதும் வெளிப்படையாக தெரியாது என்பது இந்த நோயின் சிக்கலுக்குக் காரணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com