கணைய பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள்… ஜாக்கிரதை! 

Pancreatic Damage Foods!
Pancreatic Damage Foods!
Published on

கல்லீரலுடன் ஒட்டியிருக்கும் கணையம், நம் உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இது உணவு ஜீரணிக்க உதவும் செரிமான நொதிகளை உற்பத்தி செய்கிறது. மேலும், இன்சுலின் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்டால் பல்வேறு விதமான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இந்தப் பதிவில் கணைய பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

கணைய பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள்: 

எண்ணெயில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு மாமிசம், பால் பொருட்கள் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது கணையத்தை பாதித்து கணைய அழற்சி, நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, ட்ரான்ஸ் கொழுப்புகள் கணையத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இவை பலதரப்பட்ட உணவுகளில் காணப்படுகின்றன. 

அதிக சர்க்கரை நிறைந்த பானங்கள், கேக்குகள், பிஸ்கட்டுகள் போன்ற உணவுகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து கணையத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். இது நீண்டகால கணைய பாதிப்பிற்கு வழிவகுக்கும். 

அதிகமாக ஆல்கஹால் குடிப்பது கணையத்தை நேரடியாக பாதித்து, கணைய புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும். மேலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம் சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால், அவை கணையத்திற்கு கெடுதலை ஏற்படுத்தலாம். 

காரமான உணவுகளை சாப்பிடுவது சிலருக்கு கணையத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, அதிகமாக காரம் சாப்பிடுவதை நிறுத்தவும். மேலும், நார்ச்சத்துக்கள் அதிகம் மிகுந்த உணவுகளை சாப்பிடவும். நார்ச்சத்து குறைவாக எடுத்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கக்கூடும். எனவே, குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகள் கணைய பாதிப்புக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
55 வயதைக் கடந்தவர்கள் ஜாக்கிரதை... கணைய பாதிப்பும் அதன் அறிகுறிகளும்! 
Pancreatic Damage Foods!

கணையம் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்? 

கணையம் பாதிக்கப்பட்டால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்தும். கணையம் வீங்கி, அழற்சி ஏற்பட்டால் வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கணைய பாதிப்பு நீண்ட காலமாக தொடர்ந்தால் அது புற்றுநோயாக மாறி உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும். 

நாம் உண்ணும் உணவுகள் நம் கணைய ஆரோக்கியத்தை பெரும் அளவு பாதிக்கின்றன. அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதால் கணைய பாதிப்பை தடுக்க முடியும். இவற்றிற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நமது கணைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com