
நம் கால்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நமக்கு என்ன பிரச்னை என்பதை அறிய முடியும். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
1. வீங்கிய கால்கள்
உங்கள் கால்களில் நீர் சேர்ந்துள்ளது என்பதையே உணர்த்தும் இந்த வீக்கம். இது வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் குறைபாட்டாலும் ஏற்படலாம். இந்த வீக்கம் அதிகமாகி சிவத்தல் மற்றும் வலி போன்றவற்றை ஏற்படுத்துமானால் அது ஆபத்தான blood clot ஆக இருக்கலாம். காலை மேலே தூக்கி வைப்பது, உப்பைத் குறைப்பது போன்றவை மூலம் இது கட்டுப்படும். புரதம் அதிகம் உட்கொள்ள வேண்டும். காலுக்குப் பயிற்சி தருவதன் மூலமும் இது கட்டுப்படும்.
2. கணுக்கால் வலி
கணுக்காலில் வலி ஆர்தரைடிஸ் மற்றும் வைட்டமின் டி, சி சத்துக்களின் குறைபாட்டால் வரலாம். மேலும் மக்னீசியம் குறைபாடும் நரம்பை பலவீனமாக்கும். காலை பிடித்தே இழுக்கும். காலில் சரியான இரத்த ஓட்டம் சேராததும் காரணமாகும். மேலும் கணுக்கால் அழற்சியாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் இப்படி ஆகும். ஊட்டச்சத்து நிபூணரை அணுக வேண்டும்.
3. மரத்துப் போதல்
நரம்புகள் பாதிக்கப்பட்டால் மற்றும் நீரிழிவு உள்ளவர்களுக்கு இது ஏற்படும். வைட்டமின் பி12மற்றும் ஈ குறைபாட்டாலும் மரத்துப் போகும். பொட்டாசியம் மற்றும் மக்னீசிய சத்து குறைபாடு காரணமாகவும் வெறும் காலில் நடப்பதாலும் ஏற்படும். நரம்புகளை பலப்படுத்த நல்ல ஊட்டச்சத்து உட்கொள்ள வேண்டும்.
4. Spider veins
நரம்புகள் பலவீனமாகி இந்த முடிச்சுகள் ஏற்படுகின்றன. வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவினாய்டுகள் குறைபாட்டால் இப்படி ஏற்படும். எடை அதிகம் உள்ளவர்கள் ஒரே இடத்தில் அதிகநேரம் அமர்பவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படும். பலவீனமான நரம்புகள் உடல் நிறம் மற்றும் சருமத்தை பாதிக்கும். எடைக்குறைப்பு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி இதை குறைக்கலாம்.
5. வெடிப்பு நிறைந்த கால்
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். துத்தநாக சத்து, வைட்டமின் ஏ மற்றும் கொழுப்பு அமிலங்களின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் துத்தநாக சத்து நல்ல சருமத்தை ஊக்குவிக்கும்.
6. Cold feet
இது இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. ஹைபோதைராய்டிசமும் காரணமாகும். உடலில் சீரான இரத்த ஓட்டத்தை பெற வைக்க வேண்டும். சரியான சாப்பாடு உட்கொள்ளாமல் இருந்தால் இந்த மாதிரி cold feet ஏற்படும். ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகுவது நல்லது.
7. குதிகால் வலி
இதை plantar fasciitis என்று கூறுவார்கள். இது வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுகிறது. பலவித வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர்களுக்கும் இது ஏற்படும். இடையிலும் கவனம் வேண்டும். குதிகால் வீங்கினால் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். இதை சரிசெய்யாவிட்டால் முட்டி மற்றும் இடுப்பு வலி ஏற்படும்.
8. கால் நரம்பு இழுப்பு
தண்ணீர் சத்து குறைபாடு இருந்தால் இந்த பிரச்னை ஏற்படும். பொடாசியம், கால்சியம், மக்னீசியம் குறைபாடு இருந்தாலும் வரலாம். நிறைய தண்ணீர் குடிக்க, பிரச்னை குறையும். மசாஜ் செய்வதும் பலனைத் தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)