ginger
People with these physical problems should not eat ginger.

இந்த உடல் பிரச்சினைகள் இருப்பவர்கள் தெரியாமல் கூட இஞ்சியை சாப்பிட்டு விடாதீர்கள்? 

Published on

இஞ்சி பண்டைய காலத்தில் இருந்தே மருத்துவம் மற்றும் சமையல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மசாலா பொருளாகும். எந்த உணவாக இருந்தாலும் அதில் இஞ்சி சேர்த்தாலே தனி ருசிதான். இஞ்சியில் ஜிஞ்சரோல், ஷோகோல் மற்றும் ஜிங்கிபெரோன் போன்ற பயனுள்ள சேர்மங்கள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும் சிலருக்கு இஞ்சி சாப்பிடுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பதிவில் எந்த உடல் பிரச்சினை இருப்பவர்கள் இஞ்சி சாப்பிடக்கூடாது என்பதை பற்றி பார்க்கலாம். 

இஞ்சி சாப்பிடக் கூடாதவர்கள்: 

  • இஞ்சி, ரத்தம் உறைதலை அதிகரிக்கக் கூடியது. எனவே ரத்தம் உறைதல் கோளாறு உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்பவர்களும் இஞ்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

  • உங்களுக்கு வயிற்றுப் புண்கள் இருந்தால் ப்ளீஸ் தயவுசெய்து இஞ்சி சாப்பிடாதீர்கள். இது வயிற்றுப்புண்களை மோசமாக்க கூடும். 

  • பித்தப்பை கற்கள் பாதிப்பு உள்ளவர்கள் Don't Touch The இஞ்சி. இது உங்களது பித்தப்பை சுருக்கத்தை அதிகரிப்பதால், பித்தப்பை கற்கள் உள்ளவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தக்கூடும். 

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இஞ்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் உள்ள சிசுவுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பது பற்றிய போதுமான தகவல்கள் இல்லை. 

  • அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இஞ்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது ரத்த உறைதலை அதிகரிக்கும் என்பதால், அறுவை சிகிச்சையின் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். 

இதையும் படியுங்கள்:
இஞ்சி, பூண்டு, மிளகு ருசிக்காக மட்டுமல்ல; ஆரோக்கியம் பெறவும்தான்!
ginger

இதுதவிர சிலருக்கு இஞ்சி ஒவ்வாமை இருக்கலாம். இதனால் தோல் வீக்கம், சரும பிரச்சனைகள், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதிக அளவில் இஞ்சி சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதால், இஞ்சியை மிதமாகவே உட்கொள்ள வேண்டும். 

இஞ்சி பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு பயனுள்ள மசாலா பொருள். இருப்பினும் சிலருக்கு இஞ்சி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், மேலே குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள் இஞ்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இஞ்சி சாப்பிடுவது பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

logo
Kalki Online
kalkionline.com