
பெண்களுக்கு பெரும்பாடு ஒரு தொல்லையாகும். இதற்கு மிளகுடன் வேப்பங்கொழுந்தை சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்து இதை காலை மாலை எருமைக் தயிரில் சேர்த்து சாப்பிட பெரும்பாடு நீங்கும்.
ஒரு கரண்டி மிளகுப் பொடி, இரண்டு ஸ்பூன் பாகல் இலைச்சாறு இரண்டு ஸ்பூன் நெய் கலந்து உட்கொண்டு வந்தால் அஜீரணம், வயிற்றுப் பொருமல் வயிற்றுவலி நீங்கும்.
கெட்டியாக மிளகு ஒன்றை எடுத்து தயிரில் உரைத்து கண்ணுக்கு மைபோல் இட்டால் மாலைக் கண் நோய் குணமாகும்.
காய்ச்சலுக்கு மிளகு கஷாயம் சாப்பிட குணமாகும்.
மிளகு, திப்பிலி, இஞ்சி, நாககேசரம் இவைகளை தலா இரண்டு கிராம் எடுத்து இடித்து பசு நெய்யில் கலந்து அடுப்பில் கிளறி எடுக்கவும். இதை வெறும் வயிற்றில் சாப்பிட மலடு நீங்கும்.
பொதுவாக மலட்டுத் தன்மை நீங்க பத்து மிளகை பொடி செய்து அத்துடன் ஒரு ஸ்பூன் அளவு பாகல் இலைச்சாற்றையும்,ஒரு ஸ்பூன் கரிசலாங்கண்ணி சாறும் கலந்து வெறும் வயிற்றில் உட்கோள்ள மலட்டுத்தன்மை நீங்கும்.
மிளகுப் பொடியுடன் தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து உட்கொள்ள எந்த வகையான இருமலும் குணமாகும்.
சாப்பிடும் போது முதல் கவனத்தில் நெய்யில் வறுத்த 5 மிளகை பிசைந்து சாப்பிட அஜீரணம் வரலாற்றுப் பொருமல் சரியாகும்.
மிளகு, வெண்முருங்கை வேர் 2 கிராம் அளவு பொடிப் பசலை இலைகளை சேர்த்து அரைத்து காலை மாலை மூன்று நாட்கள் உட்கொள்ள மஞ்சள் காமாலை குணமாகும். அப்போது பத்திரமாக இருக்க வேண்டும்.
காமாலை ஏற்பட்டு விட்டதா? மிளகையும் மூக்கரட்டையும் வேரோடு சேர்த்து அரைத்து மூன்று நாட்கள் உட்கொள்ள இது காமாலை குணமாகும்.
ஒன்பது மிளகையும் ஒன்பது இலந்தை இலைகளையும் சேர்த்து அரைத்து விழுதாக மாதவிடாய் காலங்களில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.
மிளகுடன் நாயுருவி இலையை சேர்த்து அரைத்து தயிரில் கலந்து சாப்பாட்டு வர பால்வினை நோய்கள் குணமாகும்.
கண்ணில் பூவா? ஐந்தாறு மிளகை திப்பிலியுகடன் சேர்த்து அரைத்து தேனில் கலந்து அதை கண்ணில் விட முதலில் எரியும். சில நாட்கள் தொடர்ந்து செய்து வர கண்ணில் ஏற்பட்ட பூ மறைந்தே போகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)