அன்னாசி பூ ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; அழகுக்கும்தான்!

Pineapple Flower
Pineapple Flowerhttps://tamil.boldsky.com

ஸ்டார் பூ என்று சொல்லக்கூடிய அன்னாசி பூவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அன்னாசி பூ இல்லாத பிரியாணி கிடையாது. கம கமவென வாசனைக்கு சேர்க்கும் அன்னாசி பூவில் முழுக்க முழுக்க ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அடங்கி இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க செய்யும் சக்தியும் அன்னாசி பூவுக்கும் உண்டு. அன்னாசி பூவில் வைட்டமின் ஏ, சி என ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளதால் செரிமானத்தை சீராக்குகிறது. அதனால்தான் அசைவ உணவுகளில் அன்னாசி பூக்களை சேர்க்கிறார்கள்.

இந்த அன்னாசி பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் மிளகு, சீரகம் இரண்டையும் தட்டி போட்டு கொதிக்க வைத்து இறக்கி அத்துடன் சிறிது அன்னாசி பவுடரையும் கலந்து வடிகட்டி தேன் கலந்து அருந்தி வர, ஜீரணப் பிரச்னையுடன் சுவாசக் கோளாறுகளும் நீங்கும்.

அசைவ உணவுகள் இல்லாவிட்டாலும் கூட வெறுமனே தண்ணீரில் இந்த அன்னாசி பூவை கொதிக்க வைத்து குடித்தாலே போதும், அதிலும் செரிமான கோளாறு உள்ளவர்கள் வயதானவர்கள் அடிக்கடி வாந்தி எடுக்கும் குழந்தைகள் போன்றோர் இதைக் குடித்துவரும்போது வாய்வு தொல்லையாலும் வயிறு உப்புசம், வயிறு பொருமல் விலகிவிடும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.

பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிலக்குகள் இருந்தால் அதனை சரி செய்கிறது இந்த அன்னாசி பூக்கள். இந்தப் பூக்களை வாணலியில் போட்டு வறுத்து தூள் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் பனைவெல்லம் அரை ஸ்பூன் அன்னாசி பவுடர், கால் ஸ்பூன் பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தினமும் காலையில் குடித்து வந்தாலே ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகிவிடும். இந்த அன்னாசி பூவை வறுத்து பவுடர் போல வைத்துக் கொண்டால் சில உடல்நல கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். அன்னாசி பூவை பவுடராக அரைத்து வைத்துக்கொண்டு அதிலிருந்து தினமும் ஒரு டீஸ்பூன் மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் ஜீரணம் எளிதாவதுடன் புளித்த ஏப்பமும் நீங்கும்.

தாய்ப்பாலை பெருக்கும் சக்தி அன்னாசி பூக்களுக்கு உண்டு. அவ்வளவு ஏன், புற்று நோய்களை உண்டாக்கும் நச்சுகளை அடித்து விரட்டக்கூடியது இந்தப் பூக்கள். கலோரிகள் மிகக் குறைவான இந்தப் பூக்களை உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உடலில் இந்த மாற்றங்கள் இருக்கிறதா? அப்படியென்றால் ஜாக்கிரதை!
Pineapple Flower

பொதுவாக, நமது சருமத்தில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற வேதிப்பொருட்கள் இருக்கிறது. இது எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நம்முடைய சருமத்தில் சுருக்கம் ஏற்படாது. முப்பது வயது கடந்த பிறகு படிப்படியாக இது குறைய ஆரம்பிக்கும். மேலும், உடலில் இருக்கக்கூடிய எண்ணெய் பசையும் குறைய ஆரம்பிப்பதால் விரைவிலேயே சுருக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகளும் உண்டாகும். இதை நீக்குவதற்கு நம்முடைய சருமத்திற்கு அதிக அளவில் கொலாஜன் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். அந்த வகையில் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு பூதான் அன்னாசி பூ. அன்னாசி பூவில் ஆண்டி ஆக்சிடெண்ட் மற்றும் ஆன்ட்டிவிரிங்ளின் போன்ற தன்மை அதிகமாகவே இருக்கிறது. அன்னாசி பூவின் மூலக்கூறுகளை பல க்ரீம்கள் தயார் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

மூன்று அன்னாசி பூவை எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாகப் பொடி செய்து இதனுடன் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியையும் சேர்த்து இரண்டையும் பேஸ்ட்டாக தயார் செய்வதற்கு தேவையான அளவு பன்னீரையும் ஊற்றி கலந்து கொண்டு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும். எங்கெல்லாம் சுருக்கம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் நாம் இதை தடவிக் கொள்ளலாம். பதினைந்து நிமிடம் அப்படியே உலர விட்டு, பிறகு குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.

பத்து அன்னாசி பூக்களை, மூன்று கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி, இது ஒரு கிளாஸ் ஆகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக ஆறிய பிறகு இந்த தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இந்தத் தண்ணீரை நாம் தினமும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com