கீமோதெரபி சிகிச்சை பெறும்போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க ப்ளீஸ்! 

Chemotherapy
Chemotherapy

கீமோதெரபி என்பது புற்றுநோய் செல்களை அழிக்க பயன்படும் ஒரு வகை சிகிச்சையாகும். இருப்பினும் இந்த சிகிச்சை மூலமாக ஆரோக்கியமான செல்களும் சேதப்படுத்தப்படலாம். இதன் காரணமாக கீமோதெரபி சிகிச்சை பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த சிகிச்சையைப் பெறும்போது சில உணவுகளைத் தவிர்ப்பது அந்த சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். 

கீமோதெரபி சிகிச்சையின்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

முதலில் பச்சை இறைச்சி மற்றும் பச்சை முட்டையைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகள் சால்மொனெல்லா மற்றும் லிஸ்ட்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கலாம். அவை நோய்த் தொற்றுக்கு வழிவகுத்து, சிகிச்சையின் பக்க விளைவுகளை அதிகரிக்கும். 

கீமோதெரபி சிகிச்சைகள் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. எனவே, ஜீரணிக்க கடினமான பால் பொருட்களை சாப்பிட வேண்டாம். ஏனெனில் பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் ஜீரணமாவதைக் கடினப்படுத்தும். 

முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் விட்டமின் கே நிறைந்துள்ளது. இது ரத்தத்தை மெலிதாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதால், கீமோதெரபி சிகிச்சைக்கு இடையூறு விளைவிக்கலாம். 

திராட்சை பழம் மற்றும் தர்பூசணி போன்ற பழங்கள், கீமோதெரபி சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ரத்த உறைவு மருந்தின் செயல்திறனை பாதிக்கலாம். எனவே இந்தப் பழங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்கள் ஆல்கஹாலை தொடவே கூடாது. ஆல்கஹால் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே கீமோதெரபியால் சேதம் அடைந்திருக்கும் கல்லீரலுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். 

சர்க்கரைகள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட பொருட்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை பலவீனப்படுத்தி அலர்ஜி பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மேலும் காபி நிறைந்த பொருட்கள் சோர்வு மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்தி, சில மருந்துகளின் செயல் திறனை பாதிக்கும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும் 8 மூலிகைகள்!
Chemotherapy

என்ன உணவுகள் சாப்பிடலாம்: 

  • நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உண்ணுங்கள். 

  • போதுமான அளவு உடலுக்குத் தேவையான புரதம் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். 

  • நன்கு சமைக்கப்பட்ட இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணுங்கள். 

  • பாஸ்ட்ரைஸ் செய்யப்பட்ட பால் பொருட்களைப் பயன்படுத்தவும். 

  • தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். 

  • உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் பேசி நீங்கள் எதுபோன்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிற திட்டத்தை உருவாக்குவது நல்லது. 

நீங்கள் கீமோதெரபி சிகிச்சை பெறும்போது சரியான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்வது முக்கியம். மேலே குறிப்பிட்டுள்ள சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் பக்க விளைவுகளை குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்தப் பதிவு தகவல் நோக்கத்திற்காக எழுதப்பட்டதே தவிர, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com