நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உணவுக் கட்டுப்பாடு, மருத்துவ உதவி என பல வழிகளைப் பின்பற்றி வருகின்றனர். அதோடு, இந்த 8 வகை மூலிகை உணவுகளின் பயன் அறிந்து அவற்றையும் உபயோகிப்பதன் மூலம் நல்ல பயன் பெறலாம். அந்த மூலிகைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பட்டை (Cinnamon) எனப்படும் இந்த பிரசித்தி பெற்ற மூலிகையானது, இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்து இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவி புரிகிறது.
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட் சத்துக்கள் செரிமான உறுப்புகளிலிருந்து உடலுக்குள் மிக மெதுவாக உறிஞ்சச் செய்கிறது வெந்தயம். மேலும், கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவையும் அதிகரிக்கக் செய்யும். இதனால் இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்.
இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்டது மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கூட்டுப்பொருள். இதுவும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
துளசி (Holi Basil) என்ற மூலிகை செடியிலும் இன்சுலின் சென்ஸிட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்யும் குணம் உள்ளது. இதுவும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவி புரியும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துப் பராமரிக்க உதவும் பாரம்பரிய இந்திய மருந்துகளின் தயாரிப்பில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவது ஜிம்னெமா ஸில்வெஸ்ட்ரெ (Gymnema Sylvestre) என்ற மூலிகை. தமிழில் இது சிறு குறிஞ்சான் என கூறப்படுகிறது.
யூரோப்பியன் பார்பெரி மற்றும் ஆரெகன் கிரேப் போன்ற தாவரங்களில் உள்ள பெர்பெரைன் (Berberine) என்றொரு கூட்டுப்பொருள் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் குணம் கொண்டுள்ளது.
மேற்கூறிய மூலிகைகளை சரியான முறையில் பயன்படுத்தி சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக்கொள்ளலாமே!