உங்களுக்கு என்ன நோய் இருக்கு? ஒரே கார்டில் மருத்துவ ஹிஸ்டரி!

pm health insurance card download
pm health insurance card download
Published on

ந்தியர் என்ற அடையாளத்திற்காக நம் அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. இந்த ஆதார் அட்டையைதான் அனைத்து அடையாளத்திற்கும் நாம் பயன்படுத்துகிறோம். ஆதார் அட்டை எண்ணை தட்டினால் போதும் நம்முடைய மொத்த பயோடேட்டாவும் வந்துவிடும். காரணம் சின்ன சிம் வாங்குவது முதல் பெரிய பெரிய வேலை, படிப்பு என அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் தேவைப்படுகிறது.

ஒரே கார்டில் மொத்த டேட்டா:

இது போன்று தான் இந்த டிஜிட்டல் ஹெல்த் கார்டும். பிரதமர் மோடியின் இந்த ஹெல்த் இன்சுரன்ஸ் கார்ட் ஒரு சிறந்த திட்டமாகும். ஏனென்றால் இந்த கார்டில் உங்களது அனைத்து மெடிக்கல் ரெக்கார்ட்ஸும் பதிவாகியிருக்கும். ஒரு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் எடுத்து செல்லவேண்டிய முக்கியமானவைகள் - மருந்து சீட்டு, எக்ஸ்ரே, ஸ்கேன் ரிப்போர்ட், மாத்திரைகள் என பல மருத்துவ சான்றுகளை எடுத்து செல்ல வேண்டும்.

இனி இந்த சிரமத்தை போக்கும் விதமாக தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த இன்சுரன்ஸ் கார்டின் நம்பரை டைப் செய்தால் போதும், உங்களது மொத்த மருத்துவ வரலாறும் நொடியில் கம்பியூட்டரில் வந்துவிடும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்:

இந்த டிஜிட்டல் ஹெல்த் ஐடி ஏழு இலக்கங்களைக் கொண்டிருக்கும். மருத்துவரிடம் செல்லும் போது, ​​நோயாளி இந்த அடையாள எண்ணை அவரிடம் சொல்ல வேண்டும். மருத்துவர் கணினியில் இந்த ஐடியை தட்டியவுடன், உங்கள் மருத்துவ வரலாறு அனைத்தையும் அவர் பெற்றுவிடலாம்.

மேலும், இந்த ஹெல்த் கார்டை செயல்படுத்த, உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் கார்டுடன் லிங்க் செய்ய வேண்டும்.

ஒரே நாடு ஒரே கார்டு:

இந்த கார்டை கொண்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். என்னுடைய மொத்த மருத்துவ வரலாறும் இந்த மருத்துவருக்கு தான் தெரியும் அவருக்கு தான் தெரியும் அவரையே நாட வேண்டும் என்ற தயக்கம் இனி தேவையில்லை. நாடு முழுவதும் இந்த கார்டை எந்த மருத்துவமனைக்கு வேண்டுமென்றாலும் கொண்டு சென்று பயன்பெறலாம்.

கார்டால் என்ன நன்மை:

இந்த கார்ட் வைத்திருப்பதால் மிகப்பெரிய நன்மை ஒன்று இருக்கிறது. நாம் எங்கேயோ விபத்தில் சிக்கி விட்டு பேசமுடியாமல் இருந்தால் அப்போது இந்த கார்ட் நமது மேல் சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருக்கும், யாரையும் கேட்காமல் மருத்துவரே இந்த கார்ட் மூலம் டேட்டாவை தெரிந்து கொண்டு மேல் சிகிச்சையை தொடங்குவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com