Poonam Pandey Death: இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தவிர்க்கலாம்! 

Poonam Pandey Death
Poonam Pandey Death

பிரபல மாடல் மற்றும் நடிகையுமான பூனம் பாண்டே Cervical Cancer எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்த செய்தி திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பதிவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றால் என்ன? அது வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 

What is Cervical Cancer? - கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பை வாயை பாதிக்கும் ஒரு வகை புற்று நோயாகும். இது யோனியுடன் இணையும் கருப்பையின் கீழ் பகுதியில் உருவாகும். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்ப்பப்பை வாயில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ந்து கட்டுப்பாடில்லாமல் கட்டிகளை உருவாக்கும். 

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது தடுக்கக்கூடிய நோய். இது உலக அளவில் ஆயிரக்கணக்கான பெண்களை பாதிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைத் தேர்வுகளை மேற்கொள்வது மூலமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம். 

எப்படி தவிர்ப்பது? 

1. HPV தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி போடுங்கள்: Human Papilloma Virus-ஆல் ஏற்படும் தொற்று கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதற்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி மூலமாக, புற்றுநோய் உருவாக்கும் அபாயத்தைத் தடுக்க முடியும். பொதுவாகவே ஆண்களும் பெண்களும் பாலுறவில் ஈடுபடுவதற்கு முன் இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. 

2. பாதுகாப்பான உடலுறவு: பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவது HPV நோய்த் தொற்று ஏற்படுவதன் அபாயத்தைக் குறைக்கும். எனவே இதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள ஆணுறைகளை முறையாக பயன்படுத்துவது அவசியம். குறிப்பாக அதிக நபர்களுடன் பாலியல் தொடர்பில் இருப்பதைத் தவிர்ப்பது ஆபத்தை மேலும் குறைக்கலாம். 

3. PAP பரிசோதனை: PAP மற்றும் HPV போன்ற வழக்கமான சோதனைகள் கர்பப்பை வாய் பகுதியில் உள்ள அசாதாரண மாற்றங்களைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு முக்கியமானவை. குறிப்பாக இதற்காகவே பின்பற்றப்படும் பரிந்துரைக்கப்பட்ட ஸ்கிரீனிங் வழிகாட்டுதல்களை பின்பற்றவும். இதன் மூலமாக ஆரம்ப கட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை அளித்து சரி செய்யும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
Poonam Pandey Death: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான 5 காரணங்கள்!
Poonam Pandey Death

4. புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: புகைப்பிடிப்பதால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மட்டுமின்றி பிறவகை புற்று நோய்களின் அபாயமும் அதிகம் உள்ளது. புகையலில் உள்ள இரசாயனங்கள் டிஎன்ஏவை சேதப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்குவதால், புற்றுநோய் வாய்ப்புள்ளது. எனவே புகைப்படத்தை நிறுத்தினால் உங்களுடைய ஒட்டு மொத்த ஆரோக்கியமும் மேம்பட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். 

5. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்: பொதுவாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களித்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். எனவே ஆரோக்கியமான உணவு வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மன அழுதத்தை நிர்வகித்து வந்தாலே, தொற்று நோய்களிலிருந்தும், புற்று நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com