Poonam Pandey Death: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான 5 காரணங்கள்!

Cervical Cancer Causes.
Cervical Cancer Causes.

பிரபல மாடல் மற்றும் நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்த செய்தி திரையுலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதே ஆன பூனம் பாண்டேவின் இறந்த செய்தியை யாராலும் நம்ப முடியவில்லை. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்ன அவ்வளவு கொடூரமானதா? இது வருவதற்கான காரணங்கள் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். 

Cervical Cancer (கர்ப்பப்பை வாய் புற்றுநோய்) என்றால் என்ன?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது கருப்பை வாயை பாதிக்கும் ஒரு வகை புற்று நோயாகும். இது யோனியுடன் இணையும் கருப்பையின் கீழ் பகுதியில் உருவாகும். உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு இந்த புற்றுநோய் குறிப்பிடத்தக்க அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்ப்பப்பை வாயில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ந்து கட்டுப்பாடில்லாமல் கட்டிகளை உருவாக்கும். 

பெரும்பாலான சமயங்களில் இந்த புற்றுநோயானது Human Papilloma Virus (HPV) எனப்படும் ஆபத்தான வைரஸ் மூலமாக ஏற்படும் தொற்று நோய்களால் உருவாகிறது. இது ஒரு பொதுவான பாலியல் நோய்த்தொற்று. இந்த வகை நோய்த்தொற்றுகள் பெரும்பாலான சமயங்களில் தானாகவே சரியானாலும், காலப்போக்கில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. 

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: 

1. ஆபத்தான பாலியல் நடத்தை: சிறு வயதிலேயே பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, பாதுகாப்பின்றி பலரிடம் உடலுறவு கொள்வது போன்றவற்றால் நோய்த்தொற்று ஏற்பட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகரிக்கும்.

2. பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு: எச்ஐவி எய்ட்ஸ் உள்ளவர்கள், அல்லது நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் பலவீனமாக இருப்பதால் இந்த வகை புற்றுநோய் தாக்கும் வாய்ப்புள்ளது.

3. புகைப்பிடித்தல்: அதிகமாக புகைப் பிடிப்பதாலுப் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாக்கலாம். புகையிலையில் உள்ள ரசாயனங்கள் டிஎன்ஏ வை சேதப்படுத்தி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். இதனால் தொற்று நோய் உண்டாகி, கர்ப்பப்பை வாயில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
சத்தான சிறுதானிய ஸ்பெஷல் ரெசிபிஸ்!
Cervical Cancer Causes.

4. முறையான கண்டறிதல்முறை  இல்லாமை: கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்களை, இடுப்பு பரிசோதனை மற்றும் HPV சோதனைகள் மூலமாக முன்கூட்டியே கண்டறிய முடியும். ஆனால் இதைப் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாமல் அப்படியே விட்டு விடுகிறார்கள். இதனால் சிகிச்சை தாமதமாவதால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாகிறது. 

5. HPV நோய்த்தொற்று: கர்ப்பப்பைவாய் புற்று நோய்க்கு முக்கிய காரணமாக HPV நோய்த்தொற்று அமைகிறது. இது பெரும்பாலும் தவறான பாலியல் செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சை பெறவில்லை எனில், அது படிப்படியாக புற்றுநோய் வளர்ச்சியைத் தூண்டலாம். 

இப்படி பல காரணங்களால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உருவாகிறது. எனவே இதைப் புரிந்துகொண்டு, சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது முக்கியம். குறிப்பாக பாதுகாப்பான உடலுறவு, நோய்த் தொற்றுகளுக்கு முறையான தடுப்பூசி போடுதல், வழக்கமான கர்ப்பப் பை வாய் பரிசோதனை போன்றவற்றை கடைப்பிடித்தால், இந்த புற்றுநோய் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com